மூன்று எல்பிஎல் அத்தியாயங்களில் Jaffnaவிடம் தோல்வி அடைந்த Galle, நான்காவது முயற்சியில் பதிலடி கொடுத்து வெற்றியீட்டி சம்பியனானது

09 Aug, 2026 | 11:13 AM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆறாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஜெவ்னா கிங்ஸ் அணியை 5 விக்கெடக்ளால் வெற்றிகொண்ட கோல் கெலன்ட்ஸ் அணி சம்பியன் பட்டதை முதல் தடவையாக சூடியது.

லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் வரலாற்றில் 2020, 2021, 2024 ஆகிய மூன்று இறுதிப் போட்டிகளில் ஜெவ்னா அணியிடம் (ஸ்டாலியன் மற்றும் கிங்ஸ்) தோல்விகளைத் தழுவிய கோல் அணி  (க்ளடியேட்டர்ஸ், மார்வல்ஸ், இப்போது கெலன்ட்ஸ்) இந்த வருடம் உரிய பதிலடி கொடுத்து சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இந்த வருட லங்கா பிறீமியர் லீக் போட்டி ஒன்றில் பெறப்பட்ட மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையான 123 ஓட்டங்களை விரட்டிக் கடப்பதற்காக பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி 15.5 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எவ்வாறாயினும் அதன் ஆரம்பம் சிறப்பாக அமைவில்லை.

சாம் ஹாப்பர் (1), சரித் அசலன்க (1) ஆகிய இருவரும் ஆட்டம் இழக்க, கோல் கெலன்ட்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கை 10 ஓட்டங்களாக இருந்தது.

எனினும் தோமஸ் ரொஜர்ஸ், தினுர கலுபஹன ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் ஆரம்ப வீழ்ச்சியை சீர் செய்தனர். அதனைத் தொடர்ந்து மத்திய வரிசை வீரர்கள் வழங்கிய சிறந்த பங்களிப்புகள் கோல் கெலன்ட்ஸ் அணியின் வெற்றிக்கு போதுமானதாக இருந்தது.

துடுப்பாட்டத்தில் தோமஸ் ரொஜர்ஸ் 34 ஓட்டங்களையும் தினுர கலுபஹன 31 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன 16 ஓட்டங்களையும் தசுன் ஷானக்க ஆட்டம் இழக்காமல் 20 ஓட்டங்களையும் சஹான் ஆரச்சிகே ஆட்டம் இழக்காமல் 13 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில்  ஷக்கிப் அல் ஹசன் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ட்ரவீன் மெத்யூ 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஜெவ்னா கிங்ஸ் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ஜெவ்னா கிங்ஸ் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்ததுடன் துடுப்பாட்டத்தில் நால்வர் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

ஒரு பக்கத்தில் விக்கெட்கள் சரிந்ததால் வழமைக்கு மாறாக நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய கமில் மிஷார 41 ஓட்டங்களைப் பெற்றார்.

சமிந்து விக்ரமசிங்க 24 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ 20 ஓட்டங்களையும் தௌஹித் ஹிர்தோய் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சரித் அசலன்க 20 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஏஷான் மாலிங்க 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தரிந்து ரட்நாயக்க 14 ஒட்டஙளுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்:  சரித் அசலன்க

தொடர் நாயகன்: கமில் மிஷார

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆகஸ்ட் மாதத்திற்கான ஐசிசி சிறந்த வீரர்...

2026-09-10 17:35:42
news-image

ஹர்மன்பிரீத் கவுர் தலைகீழாக பாய்ந்து பிடித்த...

2026-09-10 17:05:27
news-image

20ஆவது ஆசிய விளையாட்டு விழாவுக்கு தயாராகும்...

2026-09-10 16:31:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும்...

2026-09-10 13:58:38
news-image

ஏஸ் கெப்பிட்டல் சிசி அணியை 64...

2026-09-10 02:04:13
news-image

பொலிஸ் கழகத்தின் கடும் சவாலை முறியடித்து...

2026-09-10 01:58:39
news-image

முவர்ஸ் அணியுடனான கால் இறுதியில் 2...

2026-09-09 22:14:27
news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26