முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி தந்தையர் மற்றும் தாய்மார் பிறீமியர் லீக்

08 Aug, 2026 | 11:22 PM
image

முகத்துவாரம் குளோபல் சிறுவர் முன்பள்ளி  ஏற்பாடு செய்துள்ள நான்காவது தந்தையர் பிறீமியர் லீக் மற்றும் அங்குரார்ப்பண தாய்மார் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள், வலைபந்தாட்டப் போட்டிகள் முகத்துவாரம் ரொக்ஹவுஸ் இராணுவ மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து நடைபெறவுள்ளது.

இவை வெறும் போட்டிகளாக மட்டுமல்லமால் பெற்றோர், பிள்ளைகளின் ஒன்றுகூடல் நிகழ்வாகவும் அமையும் என்பது உறுதி.

இந்தப் போட்டிகள் சிறுவர்களின் பெற்றோர்களை சிறந்த வீர, வீராங்கனைகளாகவும் ஆரோக்கியத்துடன் வாழக்கூடியவர்களாவும் ஆக்குவதை குறிக்கோளாகக் கொண்டு தந்தையர் மற்றும் தாய்மார் பிறீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

தந்தையர் கிரிக்கெட்டில் வத்தளை தந்தையர் அணிகள் இரண்டு தடவைகளும் முகத்துவாரம் தந்தையர் அணி ஒரு தடவையும் சம்பியனாகி உள்ளன.

இம்முறை  நான்காவது தந்தையர் பிறிமியர் லீக்கில்  மொத்தம் 7 அணிகள் பங்குபற்றுகின்றன.

முகத்துவாரம் தந்தையர்கள் நான்கு அணிகளையும் வத்தளை தந்தையர்கள் 3 அணிகளையும் களம் இறக்கவுள்ளனர்.

வத்தளை தந்தையர் அணிகள் ஒரு குழுவிலும் முகத்துவாரம் தந்தையர் அணிகள் மற்றொரு குழுவிலும் விளையாடுவர். இந்த இரண்டு குழுக்களிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு அரை இறுதிகளில் விளையாடும்.

அவற்றில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.

முன்பள்ளி வரலாற்றில் முதல் தடவை

குளோபல் முன்பள்ளி வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை தாய்மார் பிறீமியர் லீக் இம்முறை நடத்தப்படவுள்ளது.

அன்பும் பண்பும் மிக்க தாய்மார்கள் திறமையான வீராங்கனைகளாக தங்களை உயர்த்திக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியிலும் வத்தளை தாய்மார் அணிகளும் முகத்துவாரம் தாய்மார் அணிகளும் விளையாடவுள்ளன.

இரண்டு மாதங்களுக்கு மேல் தந்தையர்களும் ஒரு மாதத்திற்கு மேல் தாய்மார்களும் தங்கள் மாலை நேரங்களையும் வார இறுதி நாட்களையும் தீவிரப் பயிற்சி, கூட்டு முயற்சி  மற்றும் தங்கள் கிளைகளைப் பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஆயத்தங்களுக்காக அர்ப்பணித்துள்ளனர்.

தைரியம், அர்ப்பணிப்பு, தாய்மைக்கு எல்லையில்லை என்பதை நிரூபிப்பதற்கு இந்த அரிய வாய்ப்பை தாய்மார் பிறீமியர் லீக்கில் பங்குபற்றவுள்ள 45க்கும் மேற்பட்ட  தாய்மார்கள்    தயாராக இருக்கின்றனர்.

தாய்மார்  பிறீமியர்  லீக்கில் 5 அணிகள் விளையாடுகின்றன. அவற்றில் இரண்டு அணிகள் வத்தளை தாய்மார்களையும் 3 அணிகள் முகத்துவாரம் தாய்மார்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும்.

தந்தையர் பிறீமியர் லீக்கில் போன்றே வத்தளை தாய்மார் ஒரு குழுவிலும் முகத்துவாரம் தாய்மார் மற்றைய குழுவிலும் விளையாடுவர். அவற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு அரை இறுதிகளில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். அவற்றில் வெற்றிபெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இது இவ்வாறிருக்க, வலைபந்தாட்டப் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் வத்தளை தாய்மார் 2 அணிகளையும் முகத்துவாரம் தாய்மார் 2 அணிகளையும் களம் இறக்குகின்றனர்.

இதனைவிட வத்தளை ஆசிரியர்களுக்கும் முகத்துவாரம் ஆசிரியர்களுக்கும் இடையிலான நட்புறவு கிரிக்கெட் போட்டி ஓன்றும் நடைபெறவுள்ளது.

குளோபல் சிறுவர் முன்பள்ளியில், கல்வி என்பது குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, உறுதியான குடும்பங்களை உருவாக்குவது என்றும் நாங்கள் நம்புகிறோம். அதனால் தான் தந்தையர்களும் தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாகவும், விளையாட்டு வீர, வீராங்கனைகளாகவும், கதாநாயகர், கதாநாயகிகளாகவும் மாறுவதற்கான வாய்ப்புகளை நாங்கள் பெருமையுடன் உருவாக்குகிறோம் என முன்பள்ளியின் ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58