மெகசின் சிறையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இருவர் கைது

08 Aug, 2026 | 07:25 PM
image

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்கு போதைப்பொருள் வழங்க முயன்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டுச் சுவருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப் பகுதியிலிருந்து சிறைச்சாலைக்குள் 02 பொதிகளை வீசுவதற்கு அவர்கள் முயன்ற போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்த 02 பொதிகளையும் பரிசோதித்த போது, 22 கிராம் 250 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 02 மில்லிகிராம் 'ஹேஷ்' போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி காதணிகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய ரக கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00