வவுனியா - புளியங்குளம் மற்றும் தொம்பே ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற இரு வேறு வீதி விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வவுனியா - யாழ்ப்பாணம் பிரதான வீதி
வவுனியா - யாழ்ப்பாணம் பிரதான வீதியின் பரசன்குளம் பகுதியில், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் பின்புறத்தில் அதே திசையில் பயணித்த லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்த லொறியின் உதவியாளர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டதெனியாவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஆவார்.
ஹங்வெல்ல - பூகொட வீதி
ஹங்வெல்ல - பூகொட வீதியின் கிரிதர சந்தைக்கு அருகில் பூகொட திசையை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று, எதிர்வந்த முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த இரு பெண்கள் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் பூகொட பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஆவார். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விரு விபத்துக்கள் தொடர்பிலும் புளியங்குளம் மற்றும் தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM