கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி கைது!

08 Aug, 2026 | 05:21 PM
image

சுமார் 60 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு உற்பத்தியிலான சிகரெட்டுகளை இலங்கைக்குள் கடத்திவர முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை - திவுலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகளால் சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டார்.

துபாயிலிருந்து வருகை தந்த சந்தேகநபர், தான் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் இந்தச் சிகரெட்டுகளை மறைத்து வைத்து எடுத்துவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சிகரெட் தொகையுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், ஆகஸ்ட் 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதியை சந்தித்தனர் கத்தோலிக்க மதத் தலைவர்கள்

2026-09-10 19:13:41
news-image

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது இருவாழ்வுக் கப்பல்...

2026-09-10 19:03:31
news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00