அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும் ; புலனாய்வுப் பிரிவினர் அறிக்கை!

08 Aug, 2026 | 04:39 PM
image

யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில், 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிக்கை வழங்கியுள்ளது.

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை (07) இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் இந்த விசாரணையை விரைவில் முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். 

இதனைக் கருத்தில் எடுத்த நீதிமன்றம் விரைவான விசாரணைக்கான கட்டளைகளைப் பிறப்பித்தது.

அதன்படி, இரண்டு பொதுமக்கள், ஊர்காவற்றுறை பொலிஸார், யாழ். குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மருத்துவ அதிகாரி உள்ளிட்ட 15 பேரை நீதிமன்றத்துக்கு செப்டெம்பர் 4ஆம் திகதி அழைத்து அவர்களிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும் என்றும், இதற்கான அழைப்புக் கட்டளையை உடனடியாக அனுப்புமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

முன்பதாக, வேலணை அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட பொலிஸார், 1.15 மணியளவில் யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஹைஏஸ் ஒன்றை இடைமறித்திருந்தனர். எனினும், அந்த ஹைஏஸ் வாகனம் பொலிஸாரின் உத்தரவுக்குக் கட்டுப்படாமல் வேகமாகப் பயணித்துள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வாகனத்தைச் செலுத்திச் சென்ற 17 வயதான சிறுவன் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20