தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" - 'அத்தம' தேசிய நிகழ்ச்சித் திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆரம்பம்

08 Aug, 2026 | 04:46 PM
image

( எம்.நியூட்டன்)

தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாப்பதையும், சமூகப் பொறுப்புணர்வை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் “அத்தம” தேசிய தூய்மை தின நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகிறது.

“அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்” என்ற இலக்குடன், அரசாங்கம், தனியார் துறை மற்றும் பொதுமக்களின் கூட்டுப் பங்களிப்பில் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் சனிக்கிழமை (08) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டத்தின் இன்றைய நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் காலை 8.00 மணிக்கு யாழ்ப்பாணக் கோட்டை வெளிப்புறப் பகுதியில் ஆரம்பமாகியது.

“கிளீன் ஸ்ரீலங்கா” செயற்றிட்டத்தின் மாகாண இணைப்பாளர் எஸ். கபிலன், மாவட்ட இணைப்பாளர் P. கஜமுகன் ஆகியோரும் பங்குபற்றினார்கள்.

இதன்போது, யாழ்ப்பாண கோட்டையினைச் சுற்றிய சுமார் 2.2 கிலோமீற்றர் நீளப்பரப்பில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்ட.ன.

இன்றைய தூய்மைப் பணியில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாநகர சபையினர், பொலிஸ், இராணுவம், விமான படை, கடற்படை , யாழ்ப்பாண மாவட்ட சாரணர்கள், தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக J/81 கிராம அலுவலர் பிரிவு பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியதுடன், Save a Life, Sevalanka Foundation, World Vision என்பன அனுசரணை வழங்கினார்கள்.

மேலும், இதே சம நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் 15 பிரதேச செயலக ரீதியாகவும் ஒரு நிகழ்வும் மற்றும் மாவட்டத்தின் அனைத்து கிராம சேவக பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-09-09 06:11:57
news-image

“இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் போதெல்லாம் இந்தியா...

2026-09-09 05:55:13
news-image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - இந்திய...

2026-09-09 05:50:04
news-image

முக்கிய வழக்கு விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்...

2026-09-09 05:43:04
news-image

மனிதகுலத்திற்கு எதிராக நடைபெற்ற குற்றங்களுக்கு காரணமான...

2026-09-09 05:31:39
news-image

ஊடக ஒடுக்குமுறைக்கு வழிவகுக்கும் முயற்சிகள் ஜனநாயகத்துக்கு...

2026-09-09 05:28:23
news-image

இரவு நேரங்களில் வயல்களுக்கு தீ மூட்டப்படுவதால்...

2026-09-09 05:09:14
news-image

தனமல்வில பகுதியிலும் துப்பாக்கிச் சூடு -...

2026-09-09 05:06:48
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: சட்டத்தரணிகளின் உதவியின்றி...

2026-09-09 04:48:33
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20