சிறைச்சாலை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியம்: அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!

08 Aug, 2026 | 03:22 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கைதிகளின் மனித உரிமைகளை பாதுகாப்பது கடினமாகும்.சிறைச்சாலைக்குள் சிறு பதற்றம் ஏற்பட்ட உடனே சிறைச்சாலைக்கு முன்பாக அவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடுவது சந்தேகத்துக்குரியது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சிறைச்சாலை மோதல்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

போதைப்பொருள் மற்றும் பாதாளக்குழுக்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளின் பிரதிபலனாகவே சிறைச்சாலை மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன.பாதுகாப்பு தரப்பின் ஒத்துழைப்புடன் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளோம்.சிறைச்சாலை கட்டமைப்பு பலவீனமடைந்துள்ளது என்று எதிர்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.

சிறைச்சாலைக் கட்டமைப்பில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன. 2024 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த சிக்கல்கள் தோற்றம் பெறவில்லை.இருப்பினும் இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

சிறைச்சாலை நெரிசல் தன்மை தீவிரமடையும் போது கைதிகள் மத்தியில் உளவியல் ரீதியில் முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். சிறைச்சாலை நெரிசல் தன்மையை முகாமைத்துவம் செய்வதற்கு மானிட மற்றும் பௌதீக மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சட்டத்தின் பிரகாரம் இதற்கு தீர்வு காண்பதற்கும் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

சிறைச்சாலை கட்டமைப்பில் காணப்படும் இந்த அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் கைதிகளின் மனித உரிமைகளை பாதுகாப்பது கடினமாகும்.அதனால் தான் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு ஆராயப்படுகிறது.

போதைப்பொருளுக்கான கேள்வியை குறைத்தால் மாத்திரமே போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க முடியும். சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் ஒருவர் இல்லாத காரணத்தால் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெறுவதாக குறிப்பிடுவதை ஏற்க முடியாது. தற்போதைய பதில் ஆணையாளர் நாயகத்துக்கு சட்டத்தால் சகல அதிகாரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டுக்கு பிறகு சிறைச்சாலை கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கு ஆட்சியில் இருந்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வரும்போது சிறைச்சாலைக் கட்டமைப்பில் 1348 வெற்றிடங்கள் காணப்பட்டன. உரிய  நடவடிக்கைகளுக்கு அமைய 400 பேருக்கு நியமனங்களை வழங்கியுள்ளோம். 600 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பின்போது கையாள வேண்டிய வழிமுறைகள் காணப்படுகின்றன. அதற்கமைவாகவே எம்மால் செயற்பட முடியும்.

சிறைச்சாலைக்குள் சிறு பதற்றம் ஏற்பட்ட உடனே சிறைச்சாலைக்கு முன்பாக அவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடுவது சந்தேகத்துக்குரியது. அதேபோல் அரசியல் கட்சிகளின் யூடியூபர்ஸ் அந்த இடத்துக்கும் வருவதும் சந்தேகத்துக்குரியது. சிறைச்சாலை மோதல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு துறைமுகத்தில் போதைப்பொருளுடன் கைப்பற்றப்பட்ட இரு...

2026-09-10 17:46:18
news-image

அனைத்து சமூகங்களுக்கும் அச்சமற்ற சூழலை உருவாக்குவதே...

2026-09-10 17:43:06
news-image

2025 உயர்தர பரீட்சை: பல்கலைக்கழக இரண்டாம்...

2026-09-10 16:42:10
news-image

வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் சாரதி அனுமதிப்பத்திரம்...

2026-09-10 16:07:34
news-image

யானைத் தந்தத் துண்டுகள், ரோமங்களுடன் நபர்...

2026-09-10 16:06:15
news-image

பயணச்சீட்டு வழங்காமல் முறைகேடு: தனியார் பேருந்தின்...

2026-09-10 15:59:39
news-image

பேலியகொடையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10 15:53:25
news-image

சட்டவிரோத பணப் பரிமாற்றம்: 80 மில்லியன்...

2026-09-10 15:41:04
news-image

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: கஞ்சிபாணை இம்ரானின்...

2026-09-10 15:29:37
news-image

மொரட்டுவையில் முச்சக்கர வண்டியில் பணித்த நபரை...

2026-09-10 15:23:00
news-image

யாழ். பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு...

2026-09-10 15:20:22
news-image

வெடிபொருட்களைப் பயன்படுத்திப் பிடிக்கப்பட்ட 820 கிலோ...

2026-09-10 15:21:21