இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்கும் விழா நாளை!

08 Aug, 2026 | 02:48 PM
image

கனடா தமிழாழி பேரவையினால் நடாத்தப்பட்ட தொடர்ச்சியான 100 மணித்தியால முத்தமிழ் உலக சாதனையில் பங்கேற்று முத்திரை பதித்த இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கும் பிரம்மாண்ட விழா நாளை நடைபெறவுள்ளது.

இவ்விழா நாளை ஞாயிற்றுக்கிழமை (09) மாலை 3:45 மணிக்குக் கொழும்பு-11, ஐந்துலாம்புச் சந்தியில் அமைந்துள்ள பழைய நகர சபை மண்டபத்தில் இலங்கைத் தமிழ் கலைஞர் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பொன். பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கனடா தமிழாழி பேரவை நடாத்திய தந்தையர் தின விழாவை முன்னிட்டு, தொடர்ச்சியாக 100 மணித்தியாலங்கள் நடைபெற்ற இயல், இசை, நாடக முத்தமிழ் உலக சாதனை நிகழ்வில் இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்கள் பலர் பங்குபற்றித் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களின் இச்சாதனையைக் கௌரவிக்கும் வகையிலேயே இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர்களான கே.டி. குருசாமி, பழ புஷ்பநாதன் மற்றும் வைத்தமாநிதி, தேசபந்து திருமதி கெளசல்யா கோவிந்தபிள்ளை, 'கலைத் தங்கம்' தாஜ்மஹான் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

இலங்கைக் கலைஞர்களின் அகில உலக சாதனையை வாழ்த்தி மகிழக் கலை அபிமானிகள், கலைஞர்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் அன்போடு அழைப்பதாகச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி பொன். பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்விற்கான அனுமதி முற்றிலும் இலவசம் என்பது குறிப்பிடத்தக்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நேபாள அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு 13ஆம் நாள்...

2026-09-08 14:45:40
news-image

சக்தியின் கந்தன் திருக்கூடம்

2026-09-08 10:11:12
news-image

25 ஆண்டுகளின் பின்னர் முருங்கன் கல்நாட்டியில்...

2026-09-07 16:21:15
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58