இரத்மலானை, கோண கோவில் பகுதியில் பல கூரிய ஆயுதங்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்று மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ. 300,000 பணத்துடன் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து மூன்று வாள்கள், ஒரு கோடரி, மூன்று கத்திகள் , ஒரு கைக்குண்டு மற்றும் எட்டு கைபேசிகள் என்பன கல்கிஸ்ஸை பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்மலானை, ஆர்தர்ஸ் வீதியில் வைத்து 1,000 மில்லிகிராம் "ஐஸ்" போதைப்பொருளுடன் நபர் ஒருவரை கல்கிஸ்ஸை பொலிஸ் விசேட மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த அதிகாரி கைது செய்ததைத் தொடர்ந்து இந்த அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வீடு ஒன்றை பொலிஸார் கண்டறிந்தனர்.
அவ்வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போதே இந்த ஆயுதங்கள், பணம் மற்றும் கைபேசிகள் கைப்பற்றப்பட்டதுடன், அங்கு இருந்த ஆறு சந்தேகநபர்களும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 29 வயதுடையவர் என்பதோடு, ஏனைய சந்தேகநபர்கள் 22, 24, 33, 36 மற்றும் 51 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் இரத்மலானை, நாவலப்பிட்டி மற்றும் எஹெலியகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM