(நெவில் அன்தனி)
பேருவளை ரெட் ஸ்டார் அணிக்கும் வென்னப்புவை நியூ யங்ஸ் அணிக்கும் இடையிலான சுப்பர் லிக் கால்பந்தாட்டப் போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
கடந்த வாரம் தனது அயல் நகர கழகமும் நடப்பு சம்பியனுமான களுத்துறை புளூ ஸ்டார் கழகத்தை 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அதிரவைத்த ரெட் ஸ்டார் தனது இரண்டாவது வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் இன்றைய போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இதேவேளை, இந்த வருடப் போட்டிகளில் பிரகாசிக்கத் தவறியுள்ள நியூ யங்ஸ் தனது முதலாவது வெற்றியை ஈட்டுவதற்கு இன்று முயற்சிக்கவுள்ளது.
ரெட் ஸ்டார் கழகம் 3 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் நியூ யங்ஸ் ஒரு புள்ளியுடன் 9ஆவது இடத்திலும் இருக்கின்றன.
இந்த இரண்டு அணிகளில் ரெட் ஸ்டார் சற்று பலம்வாய்ந்தாக காணப்படுகிறது.
இன்றைய போட்டியில் நியூ யங்ஸ் அணியினர் முதலாவது வெற்றியை ஈட்டவேண்டுமானால் தங்களது தவறுகளைத் திருத்திக்கொண்டு சிறந்த வியூகங்களுடன் விளையாட வேண்டும். அல்லது மற்றொரு தோல்வியைத் தழுவுவதை தவிர்க்க முடியாததாகிவிடும்.

























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM