(நெவில் அன்தனி)
லங்கா பிறீமியர் லீக் ரி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்காவது தடவையாக வடக்கின் யாழ்ப்பாணத்தைப் பிரதிநிதித்துவம் ஜெவ்னா கிங்ஸ் அணியும் தெற்கின் காலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கோல் கெலன்ட்ஸ் அணியும் மோதும் இறுதிப் போட்டி கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் ஆறாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயம் கடந்த மாதம் 17ஆம் திகதி ஆரம்பமானதுடன் இன்றைய இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது.
2020இல் நடைபெற்ற முதலாவது அத்தியாயத்தில் கோல் க்ளடியெட்டர்ஸ் அணியை 53 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ஜெவ்னா ஸ்டாலியன்ஸ் சம்பியனாகி இருந்தது.
2021இல் நடைபெற்ற இரண்டாவது அத்தியாயத்தில் கோல் க்ளடியேட்டர்ஸ் அணியை பெயர் மாற்றத்துடன் ஜெவ்னா கிங்ஸ் 23 ஓட்டங்களால் வெற்றிகொண்டு சம்பியனானது.
தொடர்ந்து 2022இல் கலம்போ ஸ்டார்ஸ் அணியை 2 விக்கெட்களால் வீழ்த்திய ஜெவ்னா கிங்ஸ் மூன்றாவது நேரடித் தடவையாக சம்பியன் பட்டதை சூடியது.
2023இல் ஜெவ்னா கிங்ஸ் இடம்பெறாத இறதிப் போட்டியில் தம்புள்ள ஓரா அணியை 5 விக்கெட்களால் வெற்றிகொண்ட பி லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியனாகி இருந்தது.
கடைசியாக 2024இல் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மீண்டும் ஜெவ்னா கிங்ஸ் அணியும் புதிய பெயரில் கோல் மார்வல்ஸ் அணியும் மோதின.
சரித் அசலன்க தலைமையிலான ஜெவ்னா கிங்ஸ் அணி 9 விக்கெட்களால் வெற்றியீட்டி நான்காவது தடவையாக சம்பினானது.
இம்முறை சரித் அசலன்க தனது முன்னாள் அணி ஜெவ்னா கிங்ஸ் அணியை எதிர்த்தாடும் தசுன் ஷானக்க தலைமையிலான கோல் கெலன்ட்ஸ் அணியில் விளையாடுகிறார்.
ஜெவ்னா கிங்ஸ் அணிக்கு இம்முறை பானுக்க ராஜபக்ச தலைவராக விளையாடுகிறார்.
இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவை என்பதாலும் பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இந்த இரண்டு அணிகளிலும் இடம்பெறுவதாலும் இன்றைய இறுதிப் போட்டி பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெவ்னா கிங்ஸ் ஐந்தாவது தடவையாக சம்பியன் பட்டத்தை சூட முயற்சிக்கவுள்ள அதேவேளை, முன்னைய மூன்று இறுதிப் போட்டிகளில் ஜெவ்னாவிடம் அடைந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்முறை கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிபெற கங்கணம் பூண்டுள்ளது.
முதலாவது தகுதிகாண் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணியை 14 ஓட்டங்களால வெற்றி கொண்ட ஜெவ்னா கிங்ஸ் அணியில் இடம்பெற்ற அதே வீரர்கள் இறுதிப் போட்டியிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலம்போ கெப்ஸ் அணியுடனான நெற்றைய இரண்டாவது தகுதிகாண் போட்டியில் வெற்றி பெற்ற கோல் கெலன்ட்ஸ் அணியில் இடம்பெற்ற அதே வீரர்கள் இன்றைய இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என கருதப்படுகிறது.
அணிகள்
ஜெவ்னா கிங்ஸ்: காமில் மிஷார, அவிஷ்க பெர்னாண்டோ, கவாஜா நவே, தெளஹித் ஹிர்தோய், பானுக்க ராஜபக்ஷ (தலைவர்), ஷக்கிப் அல் ஹசன், சமிந்து விக்ரமசிங்க, துனித் வெல்லாலகே, லிஸாட் வில்லியம்ஸ், ட்ரவீன் மெத்யூஸ், மொஹமத் ஷிராஸ்.
கோல் கெலன்ட்ஸ்: சாம் ஹாப்பர், தோமஸ் ரொஜர்ஸ். சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, சஹான் ஆராச்சிகே, தசுன் ஷானக்க (தலைவர்), மொஹமத் நவாஸ், தினுர கலுபஹன, தரிந்து ரத்நாயக்க, சச்சிந்து கொலம்பகே, ஆக்கிவ் ஜாவேட்.
பார்வையாளர் கூடங்கள் சி மற்றும டி பிரிவுகளில் பிரவேசம் இலவசம்
இன்றைய இறுதிப் போட்டியின் போது ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் சி மற்றும் டி பார்வையாளர்கள் கூடங்களின் மேல் மற்றும் கிழ் தளங்களுக்கான பிரவேசம் இலவசமாக்கப்பட்டுள்ளதென ஸ்ரீலங்கா கிரிக்கெட்நிறுவனம் அறிவித்துள்ளது.
அத்துடன் இறுதிப் போட்டிக்கு முன்னாக இசை, கலை, கலாசாரத்துடன் கூடிய முடிவு விழா வைபவம் நடைபெறவுள்ளது.























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM