நாட்டின் சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்போம்பலை உறுதி செய்வதற்காக ஒருங்கிணைந்த விசேட பாதுகாப்பு கட்டமைப்பொன்று அமைக்கப்படவுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலின் பின்னரே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், முப்படை அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டிலுள்ள 33 சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த புதிய பாதுகாப்பு கட்டமைப்பில், சிறைச்சாலைகள் திணைக்களம், பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் தேவையான சந்தர்ப்பங்களில் முப்படையினரின் பங்களிப்புடன் கூடிய விசேட விரைவுச் செயற்பாட்டு அலகு அமைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பிற்கு அப்பாற்பட்டு கைதிகளின் நலன்போம்பல் மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமாவதைத் தடுத்தல் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசியத் தேவைகளும் இதன் மூலம் கவனத்தில் கொள்ளப்படும்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 61 சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர், சிறைச்சாலைகளுக்குள் சதித்திட்டங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் குற்றச் செயல்களைத் தடுக்க எவ்வித வாய்ப்பும் வழங்கப்படமாட்டாது என எச்சரித்தார். அதேவேளை, இவ்வாறான வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்பில்லாத சாதாரண கைதிகளுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சிறைச்சாலை அமைப்பில் நிலவும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து, தீர்மானிக்கப்பட்ட புதிய பரிந்துரைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை நாட்டின் அனைத்து 33 சிறைச்சாலைகளிலும் நடைமுறைப்படுத்தும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM