சுப்பர் லீக் சம்பியன்ஷிப்பில் நான்கு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது!

08 Aug, 2026 | 10:00 AM
image

(நெவில் அன்தனி)

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடத்தப்படும் பிரதான கழகங்களுக்கு இடையிலான சுப்பர் லீக் சம்பியன்ஷிப் 2026இல் நான்காவது கட்டம் ஆரம்பமான நிலையில் நான்கு அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது.

மூன்றாம் கட்டப் போட்டிகள் நிறைவில் அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் இருந்த றினோன் கழகத்துக்கும் மூன்றாம் இடத்தில் இருந்த கலம்போ எவ்சிக்கும் இடையிலான போட்டியுடன் நான்காவது கட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது.

இந்த வருடம் சுப்பர் லீக் போட்டிகள் யாவும் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்.

இம் முறை சுப்பர் லீக் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.

சுப்பர் லீக்கில் பங்குபற்றும் பத்து அணிகளும் முதல் சுற்றில் ஒன்றையொன்று எதிர்த்தாடும்.

முதல் சுற்று முடிவில் முதல் ஆறு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 6 சுற்றில் இரண்டு தடவைகள் ஒன்றறையொன்று எதிர்த்தாடும்.

கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்த மூன்றாம் கட்டப் போட்டிகளின் அடிப்படையில் றினோன், அப்கன்ட்றி லயன்ஸ், கலம்போ எவ்சி ஆகியன மாத்திரமே தோல்வி அடையாத அணிகளாக இருந்ததுடன் அணிகள் நிலையில் முதல் மூன்று இடங்களை வகித்தன.

இந் நிலையில் றினோன் கழகத்துக்கும் கலம்போ எவ்சிக்கும் இடையிலான பரபரப்பான போட்டி கொழும்பு சுகததாச அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.

அப் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டி  முடிவுடன் றினோன் கழகம் 10 புள்ளிகளுடன் தொடர்நது முதல் இடத்தில் இருக்கிறது. அப்பன்ட்றி லயன்ஸ் 9 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் கலம்போ எவ்சி 8 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் இருக்கின்றன.

இது இவ்வாறிருக்க, இந்த வருடம் சம்பியனாகக் கூடிய அணி என எதிர்பார்க்கப்படும் அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் தனது முதல் இரண்டு போட்டிகளில் இலகுவாக வெற்றிகளை ஈட்டிய போதிலும் மூன்றாவது போட்டியில் சீ ஹோக்ஸிடம் கடும் சவாலை எதிர்கொண்டே 1 - 0 என வெற்றியீட்டியது.

தொடரும் போட்டிகளில் றினொன், கலம்போ எவ்சி ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளே அப்கன்ட்றி லயன்ஸுக்கு சற்று கடினமாக இருக்கும் என கருதப்படுகிறது.

எனினும் றினோன், கலம்போ எவ்சி ஆகிய அணிகள் தொடரும் போட்டிகளில் மேலும் சில வெளிநாட்டு வீரர்களை இணைத்துக்கொண்டு விளையாட திட்டம் இட்டுள்ளதால் அந்த அணிகளும் சம்பியனாவதற்கு முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்பன்ட்றி லயன்ஸ் கழகத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை டிபெண்டர்ஸ் கழகத்தை சந்திக்கும்.

இந்தப் போட்டியில் அப்கன்ட்றி லயன்ஸ் கழகம் சிறந்த வியூகங்களுடனும் புத்தி சாதுரியத்துடனும் விளையாடுவது அவசியமாகும்.

டிபெண்டர்ஸ் கழகத்தின் முதல் நிலை வீரர்கள் அனைவரும் இந்தியாவில் நடைபெற்றுவரும் அழைப்பு கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடிவருகின்றனர்.

இதேவேளை கடந்த வாரம் நடப்பு சம்பியன் களுத்துறை புளூ ஸ்டார் கழகத்தை 2 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் அதிரவைத்த பேருவளை ரெட் ஸ்டார் கழகம் மற்றொரு வெற்றிக்கு குறிவைத்து வென்னப்புவை நியூ யங்ஸ் அணியை இன்று எதிர்த்தாடவுள்ளது.

ரெட் ஸ்டார் கழகம் இதுவரை மாறுபாடான பெறுபேறுகளை ஈட்டியுள்ளதுடன் நியூ யங்ஸ் மோசமான தோல்விகளைத் தழுவியுள்ளது.

நியூ யங்ஸ் அணியில் அனுபவசாலிகள் பலர் இடம்பெறுகின்றபோதிலும் அவர்கள் மூத்த வீரர்கள் என்பதால் களைப்பு மிகுதியால் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

தனது முதல் மூன்று போட்டிகளில் மிக மோசமான தோல்விகளைத் தழுவிய ரட்னம் கழகம் நாளை ஞாயிற்றுக்கிழமை புளூ ஈக்ள்ஸ் அணியை ஞாயிற்றுக்கிழமை சந்திக்கவுள்ளது.

ரட்னம் கழக வீரர்கள் திறமையாக விளையாடுகின்றபோதிலும் அணியில் ஒரு சிறந்த கோல்காப்பாளர் இல்லாததே அதன் தோவிகளுக்கு காரணமாக இருந்துவருகிறது.

பெரும்பாலும் இந்தப் போட்டியில் ரட்னம் கழகம் புதிய கோல்காப்பாளர் ஒருவரை இணைத்துக்கொண்டு விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புளூ ஸ்டார் அணிக்கும் சீ ஹோக்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி திங்கட்கிழமை நடைபெறும்.

இந்த இரண்டு அணிகளில் சீ ஹோக்ஸ் அணி மிகத் திறமையாக விளையாடிவருவதால் மற்றொரு வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58