நாட்டு மக்­களின் பிரச்­சி­னை­களை பொருட்­ப­டுத்­தாமல் அர­சாங்­கத்தில் உள்ள 30 பேர் பிர­தமர் பத­வியை பெற்­றுக்­கொள்ள கனவு காண்­ப­தாக பொது பல சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் குற்­றம்­சு­மத்­தினார்.

Image result for கல­கொட அத்தே ஞான­சார தேரர் virakesari

இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள பொது பல சேனா அமைப்பின் காரி­யா­ல­யத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநா ட்டில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு கல­கொட அத்தே ஞான­சார தேரர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில்   தற்­போது அர­சியல் ரீதி­யாக பல பிரச்­சி­னை­களும் ஆபத்துக்களும் உள்­ளன. நாட்டு பிரச்­சினையை பார்க்­கிலும் அர­சாங்­கத்­திற்குள் முரண்­பா­டுகள் அதிகம் உள்­ளன.. நாட்டில்  பிரச்­சினை என்ன நடந்­தாலும் அதனை பொருட்ப்­ப­டுத்­தாமல் சில­ருக்கு பிர­தமர் கனவு உள்­ளது. அமைச்­சர்­க­ளான மங்­கள சம­ர­வீர, ராஜித சேனா­ரத்ன உள்­ளிட்ட 30 பேர் பிர­தமர் கன­வுடன் உள்­ளனர்.

 நாடு  குழி­தோண்டி புதைக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால், இவர்கள் அர­சியல் இலாபம் தேட முயற்­சிக்­கின்­றனர். பொது எதி­ர­ணியும் குறுந்­தி­ரைப்­ப­ட­மொன்றை திரை­யிட்டு வரு­கின்­றது. அர­சி­யல்­வா­தி­களே நாட்­டுக்கு பிரச்­சி­னையை கொண்டு வந்­துள்­ளனர். நாம் தற்­போது ஆபத்­தான நிலை­மையில் உள்ளோம். 

அரச சார்­பற்ற அமைப்­பி­ன­ருக்கு குடும்­பங்கள் இல்லை. பிள்­ளை­களும் இல்லை. எனினும் தற்­போது அரச நிறு­வ­னங்­களில் உயர் அதி­கா­ரி­க­ளாக இருப்­ப­வர்கள் அவர்­க­ளே­யாவர்.

இலங்­கையின் 70 வருட அரசியல் வரலா ற்றை பார்க்கும் போது ஆட்சியாளர்களின் இயலாமை தெட்டத்தெளிவாக விளங்குகின்

றது. ஒரு கொள்கை அரசியல்வாதிகளுக்கு கிடையாது என்றார்.