(செ.கவிஷனா)
மெகசின் சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும், முன்னாள் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்திற்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரலுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் தலதா அதுகோரள எழுதியுள்ள இக்கடிதத்தில், எதிர்வரும் ஆகஸ்ட் 18, ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில விராஜ் காரியவசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பாகும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறையின் போது கைதி ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, முன்னாள் அமைச்சரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கட்சி கவலை தெரிவித்துள்ளது. மேலும், சில விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் ஒரு அவசரச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராகப் பதவியில் இருந்த காலத்தில் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளின்கீழே அகில விராஜ் காரியவாசம் கைது செய்யப்பட்டு மெகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM