ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்குத் கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்கால தடைவித்துள்ளது

Published By: Vishnu

08 Aug, 2026 | 05:45 AM
image

(எம்.எப்.எம்.பஸீர், செ.சுபதர்னி)

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ், பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருமான ரவி செனவிரத்னவுக்கு எதிராக கல்கிஸை  நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கு விசாரணயை முன்னெடுத்துச் செல்வதுக்கு  கொழும்பு மேல் நீதிமன்ம் வெள்ளிக்கிழமை (7) இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேற்படி மனு மீதான வழக்கு  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன முன்னிலையில் விசாரணைக்க எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு வெள்ளவத்தை  கடற்கரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்துத் தொடர்பில், விபத்தைத் தடுக்காமை, அலட்சியமாக வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்தியமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் ரவி செனவிரத்னவுக்கு எதிராக வெள்ளவத்துப் பொலிஸாரால் கல்கிஸை  நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இவ்வழக்கு கடந்த ஜூலை 9 ஆம் திகதி கல்கிஸை நீதிவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா முன்னிலையில் விசாணைக்கு வந்தபோதே, விபத்தைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டை ரவி செனவிரத்ன  உப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 2,500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. இதன்போது, ஏனைய இரு குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ள  பொலிஸார் அனுமதி கோரியபோதிலும், அதற்கு அனுமதியளிக்காத நீதிவான் வழக்கை ஆகஸ்ட் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.

முறைப்பாட்டாளரான வெள்ளவத்தை பொலிஸாரே குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற முற்பட்டபோது, அதற்கு அனுமதியளிக்காத நீதிவானின் உத்தரவு தவறானது எனச் சுட்டிக்காட்டி ரவி செனவிரத்ன சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

இம்மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, கல்கிஸை  நீதிவான் நீதிமன்ற வழக்கு விசாரணையை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி வரை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், மனுவின் எதிர்மனுதாரர்களான வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் செப்டம்பர் 7ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தல் விடுக்குமாறும் இதன்போது உத்தரவு பிறப்பித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08