மன்னார் பேசாலையில் பற்றைக்காட்டில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Published By: Vishnu

08 Aug, 2026 | 05:42 AM
image

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலை 8 ஆம் வட்டாரம் பகுதியில் காணப்பட்ட பற்றைக்காட்டு பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை (7) மதியம் ஆண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில்  சடலம் ஒன்று காணப்படுவதை  அவதானித்த அப்பகுதி மக்கள்  உடனடியாக கிராம சேவையாளர் ஊடாக பேசாலை போலீசாருக்கு   தகவல் வழங்கப்பட்டது.

 இதையடுத்து பேசாலை பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்றனர்.

இதன் போது பொலிஸார் குறித்த சடலத்தை மீட்ட தோடு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது சடலமாக மீட்கப்பட்ட நபர் பேசாலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த லோரன்ஸ் மோரிஸ் (  வயது-41 ) என அடையாளம் காணப்பட்டார்.

 குறித்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்றும்,மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்ட   இடத்தில் இருந்து சற்று தொலைவில் அவரது வீடு உள்ளமை தெரிய வந்துள்ளது.

பேசாலை போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த குற்றத்தடுப்பு தடயவியல்  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 உயிரிழந்த குறித்த நபரின்  தொலைபேசி தொடர்புகள் வியாழக்கிழமை (6) காலை 7.30 மணிக்கு பின்னர் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சடலத்தை மீட்ட பேசாலை பொலிஸார் குறித்த நபரின் மரணம் தொடர்பில்   விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08