(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்படும் ஆறாவது லங்கா பிறீமியர் லீக் அத்தியாயத்தின் இறுதிப் போட்டியில் ஜெவ்னா கிங்ஸ் அணியை எதிர்த்தாட கோல் கெலன்ட்ஸ் அணி தகுதிபெற்றுக்கொண்டது.
இதன் மூலம் ஜெவ்னாவும் கோலும் இறுதிப் போட்டியில் விளையாடவிருப்பது இது ஐந்தாவது தடவையாகும்.
இந்த இறுதிப் போட்டி நாளை சனிக்கிழமை இரவு நடைபெறவுள்ளது.
இதற்கு முன்னோடியாக கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் போட்டியில் கலம்போ கெப்ஸ் அணியை 6 விக்கெட்களால் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிகொண்டது.
கட்டுப்பாடான பந்துவீச்சு, சிறப்பான களத்தடுப்பு, சாம் ஹாப்பர், சரித் அசலன்க ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் என்பன கோல் கெலன்ட்ஸ் அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
கலம்போ கெப்ஸ் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 177 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கெலன்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 177 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
தோமஸ் ரொஜர்ஸ் (13) ஆட்டம் இழந்தபோது கோல் கெலன்ட்ஸ் அணியின் மொத்த எண்ணிக்கை 21 ஓட்டங்களாக இருந்தது.
ஆனால், சாம் ஹாப்பர், சரித் அசலன்க ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 84 பந்துகளில் 126 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர்.

எனினும் அவர்கள் இருவரும் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீரர்கள் உடைமாற்று அறைக்கு திரும்பினர்.
முதலில் ஆட்டம் இழந்த சரித் அசலன்க 59 ஓட்டங்களையும் அவரைத் தொடர்ந்து ஆட்டம் இழந்த சாம் ஹாப்பர் 77 ஓட்டங்களையும் பெற்றனர்.
சாமிக்க கருணாரட்ன 10 ஓட்டங்களைப் பெற்றார்.
தசுன் ஷானக்க 8 ஓட்டங்களுடனும் சஹான் ஆராச்சிகே 5 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ரவிந்து பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கலம்போ கெப்ஸ் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் எதிரணியின் பந்துவீச்சுக்களை சரியாக புரிந்துகொள்ள முடியாத கலம்போ கெப்ஸ் அணி பவர் ப்ளே நிறைவில் 4 விக்கெட்களை இழந்து 52 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
பவர் ப்ளே முடிவடைந்து 7ஆவது ஓவர் ஆரம்பமானபோது முதல் பந்திலேயே தனது 5ஆவது விக்கெட்டை கலம்போ கெப்ஸ் இழந்தது. (52 - 5 விக்.)

ஆனால், ரூபின் ஹேர்மான், ரவிந்து பெர்னாண்டோ ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 43 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு கெளரவமான நிலையில் இட்டனர்.

ரவிந்து பெர்னாண்டோ 48 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரூபின் ஹேர்மான் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
ஹேர்மான் 7ஆவது விக்கெட்டில் மல்ஷா தருபதியுடன் 36 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
மல்ஷா தருபதி 28 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சரித் அசலன்க, சச்சிந்து கொலம்பகே ஆகிய இருவரும் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்கள் என்ற ஒரே பந்துவீச்சுப் பெறுதியைக் கொண்டிருந்தனர்.
ஆட்டநாயகன்: சாம் ஹாப்பர்




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM