சிறைச்சாலை கலவரங்கள் : அரசின் நிர்வாகத் தோல்விக்கு வெளிப்படையான சான்று ; எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதால் பொறுப்பிலிருந்து தப்ப முடியாது – ஜானக வக்கும்புர

07 Aug, 2026 | 08:45 PM
image

(செ.கவிஷனா)

நீர்கொழும்பு சிறைச்சாலையில் தொடங்கி நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழல், அரசாங்கத்தின் சிறைச்சாலை நிர்வாகத் திறன் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், பிரச்சினைகளுக்குப் பொறுப்பேற்று தீர்வு காண வேண்டிய அரசாங்கம், வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கண்டிக்கத்தக்கது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (7) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக் காரியாலயத்தில் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமாகி, தற்போது நாட்டின் பல சிறைச்சாலைகளுக்கும் பரவியுள்ள பதற்றமான மற்றும் கலவரச் சூழலானது, தற்போதைய அரசாங்கத்தின் முழுமையான நிர்வாகத் தோல்வியையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஒரு முக்கியத்துறையைக் கூட முறையாக நிர்வகிக்கத் திறமையற்ற அரசாங்கம், எழும் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகளைக் காண்பதை விடுத்து, வழக்கம் போல் எதிர்க்கட்சிகள் மீது பழிபோடும் போக்கைக் கடைப்பிடிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.

குறிப்பாக, சிறைச்சாலைகள் அமைச்சருக்கு எதிராகச் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்த பின்னணியில், திறமையற்ற ஒரு அமைச்சரைக் காப்பாற்ற முற்பட்டதன் விளைவைத்தான் இன்று ஒட்டுமொத்த நாடும் அனுபவித்து வருகிறது. சிறைச்சாலைகளுக்குள் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் சட்டவிரோத ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாக, சிறைச்சாலைத்துறை அதிகாரிகளும் அவர்களது குடும்பத்தினரும் மிகுந்த அச்சத்திலும் பாதுகாப்பற்ற சூழலிலும் நாளாந்தம் வாழ்ந்து வருகின்றனர். 

சிறைக்குள் அரங்கேறும் இத்தகைய துரதிர்ஷ்டவசமான சம்பவங்களை வெளிநாட்டுச் சதி என்றோ அல்லது மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி மூடி மறைத்துவிட முடியாது எனவும், இது அரசாங்கத்தின் நேரடி இயலாமையையும் நிர்வாகத்திறன் இன்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-09-08 11:54:08
news-image

சிறு, நடுத்தர தொழில்முயற்சிகளின் ஏற்றுமதியை 25%...

2026-09-08 11:39:08
news-image

யாழ்ப்பாணத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரம்

2026-09-08 11:09:56
news-image

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி...

2026-09-08 11:47:25
news-image

இந்தியாவின் மிகமுக்கிய பங்காளிகளில் இலங்கை ஒன்று...

2026-09-08 10:50:50
news-image

இலங்கை பட்டய ஊடக கற்கை நிறுவன...

2026-09-08 10:48:32
news-image

இரு மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம்...

2026-09-08 11:31:12
news-image

கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்...

2026-09-08 11:02:03
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்...

2026-09-08 11:43:09
news-image

விட்டமின் கொள்கலன்களில் மறைத்து 5 கோடி...

2026-09-08 10:25:17
news-image

நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது...

2026-09-08 09:50:41
news-image

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சந்தித்தார் சீனத்...

2026-09-08 09:49:22