கலம்போ எவ்.சி. - றினோன் போட்டி கோல்கள் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது

Published By: Vishnu

07 Aug, 2026 | 07:27 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (7) மாலை நடைபெற்ற கலம்போ எவ்சி அணிக்கும் றினோன் அணிக்கும் இடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

இந்தப் போட்டியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

போட்டியின் முதலாவது பகுதியில் இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட போதிலும் கோல் போடுவதற்கான சரியான வாய்ப்புகளை உருவாக்கவிலை.

என்றாலும் முதலாவது பகுதியில் கலம்போ எவ் சியின் ஆதிக்கம் நன்கு வெளிப்பட்டது.

இடைவேளைக்குப் பின்னர் றினோன் வீரர் பரீத் அஹமத் உபாதைக்குள்ளாகி வெளியேறியது அவ்வணிக்கு நெருக்கடியைக் கொடுத்தது.

கலம்போ எவ்சி அணியினர்   பல சந்தர்ப்பங்களில் றினோன் கோல் எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். 

ஆனால், றினோன் கழகத்தின் பின்கள வீரர்களும் கோல்காப்பாளரும் சாமர்த்தியமாக செயற்பட்டு கலம்போ எவ்சியின் முயற்சிகளை முறியடித்த வண்ணம் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் சலன சமீர ஓங்கி உதைத்த பந்து றினோன் கோல் காப்பின் மேலாக சென்றது.

அதேவேளை, கடைசிக் கட்டத்தில் கலம்போ எவ்சியின் கோல் எல்லையை றினோன் வீரர்கள் ஆக்கிரமித்த வண்ணம் இருந்தனர். ஆனால் அவர்களது முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை.

இறுதியில் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளியைப்ப் பெற்றுக்கொண்டன.

இந்தப் போட்டி முடிவை அடுத்து றினோன் கழகம் 10 புள்ளிகளுடன் முதலிடத்திலும் கலம்போ எவ்சி 8 புள்ளகளுடன் 3ஆம் இடத்திலும் தொடர்ந்து இருக்கின்றன.

இதே விளையாட்டரங்கில் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ள சுப்பர் லீக் போட்டியில் வென்னப்புவை நியூ யங்ஸ் கழகத்தை பேருவளை ரெட் ஸ்டார் கழகம் எதிர்த்தாடவள்ளது.

இந்தப் போட்டியில் ரெட் ஸ்டார் கழகம் தனது 2ஆவது வெற்றியை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோல்வியே காணாத அணிகள் மோதிய சுப்பர்...

2026-09-09 00:16:13
news-image

இமாம், ரிஸ்வான் தொடர்பான தகவல்கள் வெளியானதை...

2026-09-08 15:48:04
news-image

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படுவது உறுதி –...

2026-09-07 21:29:19
news-image

தோல்வி அடையாத அணிகளான அப்கன்ட்றி லயன்ஸ்,...

2026-09-07 20:29:17
news-image

நியூ யங்ஸுக்கு எதிராக ஏகப்பட்ட கோல்களைத்...

2026-09-07 20:19:26
news-image

சுவிஸ் கராத்தே லீக்: இத்தோசுக்காய் கழக...

2026-09-07 16:25:36
news-image

சுப்பர் சிக்ஸுக்கு செல்ல சீ ஹோக்ஸ்...

2026-09-07 15:29:09
news-image

20 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண தகுதிகாணில்...

2026-09-07 13:12:09
news-image

ஹர்ஷித்தாவின் நிதானமான துடுப்பாட்டம் இலங்கையின் அரை...

2026-09-07 09:05:46
news-image

ரட்னம் கழகத்தை வீழ்த்தி சுப்பர் சிக்ஸ்...

2026-09-07 15:06:57
news-image

மத்தியஸ்தரின் தவறான தீர்ப்புகளுக்கு மத்தியில் டிபெண்டர்ஸ்...

2026-09-06 15:08:03
news-image

டயமண்ட் லீக் இறுதிப் போட்டியில் ருமேஷ்...

2026-09-06 10:39:58