யாழ்ப்பாணம் - நாரந்தனை பகுதியில் இன்று இளைஞர் ஒருவரது சடலமானது தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இதன்போது நாரந்தனை தெற்கு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞனின் தாயாரும் சகோதரியும் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட நாரந்தனை பகுதியில் உள்ள வீட்டில் தந்தை வசித்து வரும் நிலையில் அவரும் தங்கி நின்று வேலை செய்வதற்காக வெளியே சென்றிருந்தார்.
வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்த இளைஞன் அந்த வீட்டிற்கு இடையிடையே வந்து செல்வது வழமை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நபர் ஒருவர் இன்று ஆடு பார்ப்பதற்கு அந்தப்பக்கமாக சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடலமாக தூக்கில் தொங்கியமை அவதானிக்கப்பட்டது. பின்னர் இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
அதன்படி அங்கு வந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சடலமானது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM