(எம்.நியூட்டன்)
யாழ்ப்பாணம் கீரிமலை குப்பை மேட்டு பகுதிக்கு, மத்திய சுற்றாடல் அதிகார சபை உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (7) கள விஜயம் மேற்கொண்டனர்.
கீரிமலை பகுதியில் சுண்ணக்கல் அகழப்பட்ட பள்ளங்களுக்குள், வலிகாமம் தெற்கு பிரதேச சபையினர் இலத்திரனியல் கழிவுகள், மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் என பல்வேறு வகையான கழிவுகளையும் கொட்டிக் குவித்துள்ளனர்.
இது குறித்து வலி.வடக்கு பிரதேச சபையின் 26 உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், வட மாகாண ஆளுநர், வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபையினர், மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலர் என பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு அளித்துள்ளனர்.
அத்துடன் வலி.தெற்கு பிரதேச சபையினர் தாம் கொட்டிய குப்பைகளை மீள அள்ளிச் செல்ல வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இந்நிலையில் வலி.தெற்கு பிரதேச சபையினர், இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் கனரக வாகனங்களில் குப்பைகள் கொட்டப்பட்ட பகுதிக்கு சென்று, கொட்டப்பட்ட குப்பைகளை குறித்த பள்ளங்களுக்குள் மேலும் தள்ளிவிட முயற்சித்துள்ளனர்.
இது தொடர்பில் அறிந்த வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, “கொட்டப்பட்ட குப்பைகளை மீண்டும் அள்ள நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர, அவற்றை மேலும் பள்ளத்தினுள் தள்ளுவதில்லை” என அவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பில், சுற்றாடல் அதிகார சபையினருக்கு வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் தொலைபேசி ஊடாக முறைப்பாடு அளித்த நிலையில், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கள விஜயம் செய்து, அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளனர்.
அங்கு காணப்பட்ட குப்பைகளை மீள அள்ளவேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை உறுப்பினர்களுக்கு தெரிவித்ததுடன், தற்போதும் குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளமையால், அதனால் எழும் புகையினால், அயலில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையான சுவாச நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது என உறுப்பினர்களுக்கு தெரிவித்து, குறித்த விடயம் தொடர்பாக தாம் விரைவான நடவடிக்கை எடுப்போம் என உறுதியளித்துச் சென்றுள்ளனர்.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM