சிறைக்கைதிகளின் பிரச்சினைகளைக் கண்டறிய கூட்டுப் பொறிமுறை 

Published By: Vishnu

07 Aug, 2026 | 06:46 PM
image

சிறைச்சாலைகளில் உள்ள நிலைமை தொடர்பிலும், சிறைக்கைதிகளின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நாட்டின் 33 சிறைச்சாலைகளிலும் உள்ள கைதிகளின் பாதுகாப்புத் தொடர்பாக மேலதிகமாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், கைதிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவர்களின் நலன்புரி நடவடிக்கைகள் குறித்தும், அவசர நிலைமைகளின் போது செயற்பட வேண்டிய விதம் குறித்தும் ஆராய்வதற்காக கூட்டுப் பொறிமுறையொன்றை ஸ்தாபிக்கவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, 33 சிறைச்சாலைகளுக்கும் உரிய வகையில், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் அவசியமான சந்தர்ப்பங்களில் முப்படையினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறிமுறையொன்று எதிர்வரும் வாரத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அவர்கள் சிறைக்கைதிகளுடனும் தொடர்ந்தும் கலந்துரையாடவுள்ளனர்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் அயேஷா ஜினசேன, பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஆகியோருடன், சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார்...

2026-09-08 11:54:08
news-image

சிறு, நடுத்தர தொழில்முயற்சிகளின் ஏற்றுமதியை 25%...

2026-09-08 11:39:08
news-image

யாழ்ப்பாணத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரம்

2026-09-08 11:09:56
news-image

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி...

2026-09-08 11:47:25
news-image

இந்தியாவின் மிகமுக்கிய பங்காளிகளில் இலங்கை ஒன்று...

2026-09-08 10:50:50
news-image

இலங்கை பட்டய ஊடக கற்கை நிறுவன...

2026-09-08 10:48:32
news-image

இரு மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம்...

2026-09-08 11:31:12
news-image

கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்...

2026-09-08 11:02:03
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்...

2026-09-08 11:43:09
news-image

விட்டமின் கொள்கலன்களில் மறைத்து 5 கோடி...

2026-09-08 10:25:17
news-image

நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது...

2026-09-08 09:50:41
news-image

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சந்தித்தார் சீனத்...

2026-09-08 09:49:22