நீதித்துறை கட்டமைப்பை வலுப்படுத்த அரசு விரைவு சீர்திருத்தங்களை முன்னெடுக்கிறது – ஹிருணி விஜேசிங்க!

07 Aug, 2026 | 06:15 PM
image

(செ.கவிஷனா)

நாட்டின் நீதித்துறை கட்டமைப்பில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர், சட்டத்தரணி ஹிருணி விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (7) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் பங்கேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அதன் ஒரு முக்கிய அங்கமாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவுபடுத்தும் நோக்கில், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு 50 புதிய அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அதே திணைக்களத்தில் வெற்றிடமாக உள்ள ஏனைய பணிகளுக்காக 131 புதிய பணியிடங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மிக விரைவாக முன்னெடுக்கப்படவுள்ளது.

நீதிமன்ற கட்டமைப்பின் செயற்றிறனை மேம்படுத்துவதற்காக, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த இரத்தினபுரி, கம்பஹா, வரக்காபொல மற்றும் அனுராதபுரம் போன்ற பகுதிகளில் உள்ள மேலதிக நீதவான் நீதிமன்றங்களின் பணிகளை மீள ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அத்துடன், புத்தளம், வெல்லவாய மற்றும் தெஹியத்தகண்டிய போன்ற பிரதேசங்களில் புதிய நீதிமன்றங்களை ஸ்தாபித்ததுடன், சில நீதவான் நீதிமன்றங்களுக்கு மாவட்ட நீதிமன்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், நீதித்துறை நடவடிக்கைகளை டிஜிட்டல்மயமாக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் வழக்குத் தாக்கல் செய்தல், நீதிமன்றத் தவணைகளைத் தெரிந்துகொள்ளுதல் போன்ற சேவைகளை இணையவழியில் வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வசதி பொதுமக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கராபிட்டிய மற்றும் கண்டி நீதிமன்றங்களில் முன்னெடுக்கப்படும் காணொளி தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் உயர்நீதிமன்ற, மேன்முறையீட்டு நீதிமன்ற டிஜிட்டல் முறைகள் என்பன நீதித்துறையை நவீனப்படுத்துவதற்கான அரசின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

மேலும், இலங்கையின் நீதித்துறைச் செயல்பாடுகளை மேலும் துரிதப்படுத்தும் நோக்கில், 22வது திருத்தச் சட்டத்தின் ஒரு அங்கமாக நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள உயர் நீதிமன்றக் கட்டமைப்பில், அனுமதிக்கப்பட்ட 110 நீதிபதிப் பணியிடங்களில் 94 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ள நிலையில், புதிய திருத்தத்தின் வாயிலாக நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்தி, நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்கு விசாரணைகளை விரைவாகவும் வினைத்திறனுடனும் முடிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சீர்திருத்தத்தின் மற்றுமொரு முக்கிய அம்சமாக, கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற முக்கிய நகரங்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த மூவரடங்கிய மேல் நீதிமன்றங்களின் சேவையை, நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன் மூலம், நீதிபதிகள் நேரடியாக அந்தந்த மாவட்டங்களுக்குச் சென்று வழக்குகளை விசாரிப்பதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அனைத்து வழக்குகளையும் தலைநகருக்கே கொண்டு வராமல், உரிய இடங்களுக்கே நீதித்துறைச் சேவைகளை எடுத்துச் செல்வதன் ஊடாக, சாதாரண மக்களுக்கும் நீதிமன்றச் சேவைகளை நெருக்கமாக்குவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் குளங்களைத் தூர்வாரும் பணிகள் தீவிரம்

2026-09-08 11:09:56
news-image

இந்தியாவின் மிகமுக்கிய பங்காளிகளில் இலங்கை ஒன்று...

2026-09-08 10:50:50
news-image

இலங்கை பட்டய ஊடக கற்கை நிறுவன...

2026-09-08 10:48:32
news-image

இரு மாணவர்களை பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சம்...

2026-09-08 11:31:12
news-image

கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய்...

2026-09-08 11:02:03
news-image

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்...

2026-09-08 10:24:07
news-image

விட்டமின் கொள்கலன்களில் மறைத்து 5 கோடி...

2026-09-08 10:25:17
news-image

நான் போர்க் குற்றவாளி அல்ல, எனது...

2026-09-08 09:50:41
news-image

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை சந்தித்தார் சீனத்...

2026-09-08 09:49:22
news-image

இந்த ஆண்டு யானை–மனித மோதல்கள் கணிசமாகக்...

2026-09-08 09:49:59
news-image

வறட்சியால் 35,169 குடும்பங்களைச் சேர்ந்த 115,586...

2026-09-08 09:27:34
news-image

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!

2026-09-08 09:20:15