ஜி டி என் - திரைப்பட விமர்சனம்

07 Aug, 2026 | 04:52 PM
image

ஜி  டி என் - திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் & ட்ரைகலர் பிலிம்ஸ்

நடிகர்கள் : மாதவன், ஜெயராம், சத்யராஜ், துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, ஷீலா, கருணாகரன் மற்றும் பலர்.

இயக்கம் : கிருஷ்ணகுமார் ராமகுமார்

மதிப்பீடு : 2.5/5

ஜி டி நாயுடு எனும் தமிழகத்தில் பிறந்த விஞ்ஞானியை பற்றிய படைப்பு என்பதாலும், தனித்துவமான இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கும் ஆர். மாதவன் தயாரித்து, ஜி டி நாயுடுவாக நடித்திருப்பதாலும் ,ஏதேனும் புதிதாக விவரிக்கப்பட்டிருக்கும் என்ற எதிர்பார்ப்பில் ...இப்படத்தைக் காண பட மாளிகைக்கு வருகை தந்த ரசிகர்களுக்கு படக்குழு நிறைவான அனுபவத்தை வழங்கியதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.

ஜி டி நாயுடு பற்றி பேச்சு வழக்கிலும் அரசாங்கத்தின் ஆவணக் குறிப்புகளிலும்... அவருடைய சுய ஒழுக்கத்தை பற்றியும், தேச பற்று குறித்தும் எதிர்மறையான பதிவுகளே இடம் பிடித்திருக்கிறது. இந்நிலையில் ஜி டி நாயுடு அவர்களின் அசலான வாழ்க்கை வரலாற்றை நேர் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு அவர்களுக்கான பாட நூலில் கட்டுரையாக இணைக்க வேண்டும் என்ற பாடநூல் வரையறை குழுவில் ஒரு உறுப்பினர் உரிய ஆதாரங்களுடன் கட்டுரையை சமர்ப்பிக்கிறார். இந்த கட்டுரையை அந்த குழுவில் உள்ள ஏனைய உறுப்பினர்கள் வாசிக்கிறார்கள். அதனூடாக ஜி டி நாயுடு அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும், வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை தழுவியும் வெகுஜன ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் இதன் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனை வாசித்து முடித்த பின் பாடத்திட்ட குழுவினர் ஜி டி நாயுடுவின் கட்டுரையை பாடநூலில் இடம்பெறுவதற்கு பரிந்துரை செய்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை.

ஒரு சுய சரிதையை படைப்பாக உருவாக்கும் போது பெரும்பாலும் அசலான சம்பவங்களையும் அதற்கான நிலவியல் பின்னணியையும் விவரிப்பது தான் நேர்மை. ஆனால் ஜி டி என் படத்தில் சில சாதகமான அம்சங்கள் இடம் பிடித்தாலும்.. பல பாதகமான அம்சங்கள் அதாவது அவர் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை வேறொரு கோணத்தில் விவரித்திருக்கிறார்கள். இங்கு தான் கதாசிரியரும், இயக்குநரும் தங்களுக்குரிய சுயசரிதைக்குரிய  படைப்பு எல்லையை மீறுகிறார்கள். 

தொழில்நுட்பங்கள் எளிய மனிதர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்த ஜி டி நாயுடு ( கோபாலசாமி துரைசாமி நாயுடு) விற்கு அந்தக் காலகட்டத்திலேயே பிரிட்டிஷ் அரசும், அதில் பணியாற்றிய இந்திய உயரதிகாரிகளும் மிகப்பெரும் தடையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதனை சுவராசியமான திருப்பங்களுடன் விவரித்திருப்பதை ரசிக்க முடிகிறது.

அந்தக் காலகட்டத்திய மனிதர்களின் சமூக அந்தஸ்து குறித்து படத்தில் இடம்பெறும் குறியீடுகள்... இந்தக் காலகட்டத்திய பார்வையாளர்களுக்கு சில ஆதிக்க விடயங்களை நுட்பமாக உணர்த்துகிறது.

ஜி டி நாயுடுவின் வரிகொடா நிலையின் பின்னணியில் தேசப்பற்று...வாவ்!

அவர் நவீன இயந்திரங்களை உருவாக்கியதன் சமூக பின்னணி.. மிரட்டல்!

ஜி டி நாயுடுவிற்கும் ..தமிழ் திரை உலகத்தின் நட்சத்திரங்களுக்குமான தொடர்பு...செம.

இந்தியாவை சர்வதேச அளவில் வல்லரசாக மாற்றிடுவதற்கு வித்திட்ட ஜிடி நாயுடுவின் கனவு-  எவ்வாறு... யாரால்... எப்படி... சிதைக்கப்பட்டது ? என்பதையும் உணர்வு பொங்க விவரித்திருப்பதும் ஓகே.

கொண்டாடப்பட வேண்டிய இந்திய விஞ்ஞானி ஜிடி நாயுடுவை சுதந்திரம் பெற்ற பிறகு இந்திய அரசாங்கம் அவருடைய சொத்துக்களை அபகரிக்க முயன்ற போது நடந்தது என்ன? என்பது என்பதை விவரித்திருப்பதும்.. சூப்பர்ப்!

ஜி டி நாயுடு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாதவன் தனது தோற்றத்திலும் உடல் மொழியிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி திரையில் தோன்றுவது இளம் ரசிகர்களுக்கு ஜி.டி நாயுடுவாகவே வாழ்கிறார்.

அம்பலாபரா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் ஜெயராம் - தன் அனுபவம் மிக்க நடிப்பால் ரசிகர்களை கவர்கிறார்.

செல்லம்மாவாக வரும் ஷீலா - பிரியாமணியை விட.. ரங்கநாயகியாக வரும் துஷாரா விஜயனுக்கு நடிப்பதில் நிறைய வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவரும் அதனை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். 

பூபேந்தர் என்கிற வட இந்திய தொழிலதிபராக நடித்திருக்கும் வினய் ராய்... ஜிடி நாயுடுவின் நண்பரான ராமையா பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சத்யராஜ்... பெருங்கிள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாகரன் ஆகியோர்களும் ரசிகர்களின் கவனத்தை கவர்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலில் முதல் இடத்தை கலை இயக்குநர் கைப்பற்றுகிறார். சுதந்திர போராட்ட காலத்திற்கு முந்தைய கோயம்புத்தூரை திரையில் விவரித்ததில் இவருடைய பங்களிப்பு அதிகம். இவருக்கு நிகராக காட்சிகளை ரசிக்கும் படி ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளரை பாராட்டலாம். இவர்கள் இருவரையும் பாராட்டும் தருணத்தில் இதற்கான பொருத்தமான பின்னணி இசையை அளித்து ரசிகர்களுக்கு படைப்பு அனுபவத்தை வழங்கிய இசையமைப்பாளரையும் பாராட்ட வேண்டும்.

ஒரு தொழிலதிபரின்.... கண்டுபிடிப்பாளரின்... வாழ்வியலை முழுமையாக விவரிக்காமல், அதில் ஒரு பகுதியை மட்டும் தெரிவு செய்து... அதில் உள்ள தேசப்பற்றை மட்டும் படக்குழுவினர் விவரித்திருப்பதற்கு ஒரு பிரிவினர் மட்டுமே ஆதரவு தெரிவிக்கிறார்கள். 

ஜி டி என் - வரிகொடா தொழிலதிபர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25