தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் மனைவி சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து மனுவை திரும்பப் பெற்றுக்கொண்தாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விவாகரத்து மனு திரும்பப் பெற்றதன் காரணமாக, தொடரப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்துள்ளதாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்- அவரது மனைவி சங்கீதா ஆகியோர் கடந்த காலங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விவாகரத்து கேட்டு, சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் தனது கணவர் விஜய் தமிழகத்தின் பிரபல நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதால் அவரிடமிருந்து விவாகரத்தும், நிரந்தர ஜீவனாம்சம் மற்றும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் வசிப்பதற்கான உரிமையும் வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று முறை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. ஆனால் ஒரு முறை கூட விஜயும், சங்கீதாவும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை.
கடந்த ஜூன் மாதம் 15ஆம் திகதியன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது விஜய் மற்றும் சங்கீதா ஆகிய இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் காணொளி வாயிலாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் விசாரணையை ஓகஸ்ட் 7ஆம் திகதியன்று ஒத்தி வைத்தது.
இந்த தருணத்தில் இன்று காலை காணொளி வாயிலாக விசாரணைக்கு சங்கீதா ஆஜரானார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுவதால்.. முதல்வர் விஜயால் ஆஜராக முடியவில்லை என்றும், விசாரணையை வேறொரு நாளிற்கு ஒத்திவைக்க வேண்டும் என்றும் விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சங்கீதாவிடம் விசாரணையை மேற்கொண்ட செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதி அரசர்.. வழக்கின் விசாரணையை இரண்டு மணி நேரம் ஒத்தி வைத்தார்.
பிற்பகல் மீண்டும் விசாரணை தொடங்கப்பட்ட நிலையில், நீதியரசரிடம் இந்த வழக்கை திரும்ப பெற்றுக் கொள்வதாக சங்கீதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதியரசர் விஜய் -சங்கீதா விவாகரத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே தமிழக முதல்வர் ஜோசப் விஜயிற்கும், மற்றும் லண்டனில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகளான சங்கீதாவிற்கும் கடந்த 1999 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி திருமணம் நடைபெற்றது என்பதும் இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் - திவ்யா சாஷா என இரண்டு வாரிசுகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM