இன்றைய திகதியில் இளம் தம்பதிகள் திருமணத்திற்குப் பிறகு தனியாக வாழ்க்கையை தொடங்குகிறார்கள். அத்துடன் திட்டமிட்டு ஒரே ஒரு குழந்தையை மட்டும் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும் அந்த குழந்தையை வளர்ப்பதற்கு முழுமையான அனுபவ அறிவு இல்லாமல்... மகப்பேறு மருத்துவ நிபுணரின் வழிகாட்டல், கற்றறிவு மற்றும் இணையதளம் மூலமாக பெறும் அறிவின் மூலமாகவே குழந்தையை வளர்க்கிறார்கள்.
அத்துடன் பொருளாதார நெருக்கடி காரணமாக கணவன் - மனைவி என இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாய சூழலும் உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளை வளர்ப்பதில் விவரிக்க இயலாத சங்கடங்களை எதிர்கொள்கிறார்கள். இந்த தருணத்தில் குழந்தை பிறந்து இரண்டு ஆண்டுகளான பிறகும் குழந்தைகள் யாரிடமும் பேசாமல்... பெயர் சொல்லி அழைத்தாலும் அதற்கு எதிர்வினை ஆற்றாமலும்... பேசுவதில் தாமதம் ஏற்பட்டாலும்... அவர்களை வைத்திய நிபுணர்கள் விர்ச்சுவல் ஒட்டிசம் எனப்படும் மெய்நிகர் ஒட்டிசம் பாதிப்பிற்கு ஆளாகி இருக்கிறார்கள் என அவதானிக்கிறார்கள்.
குழந்தை பிறந்து இரண்டு முதல் இரண்டரை ஆண்டுக்குள் யாரிடமும் பேசாமல் தனித்து இருந்தாலும் அல்லது பெயர் சொல்லி அழைத்தால் எதிர் வினை ஆற்றாமல் அதாவது திரும்பி கூட பார்க்காமல் தங்களுடைய வேலையில் கவனமாக இருந்தாலும் அல்லது பிறந்து ஒன்பது மாதங்களில் குழந்தைகள் ஒற்றைச்சொல் பேசுவார்கள். இரண்டு ஆண்டுகளான பிறகும் சில குழந்தைகள் ஒற்றைச் சொல்லை பேசாமல் பேச்சில் தாமதம் ஏற்பட்டாலும்... பிள்ளைகளின் கண்களை நேருக்கு நேர் பார்க்கும்போது அந்தப் பிள்ளை அதை தவிர்த்தாலும், பசி- தூக்கம் -அசௌகரியங்கள்- என எந்த உணர்வு ஏற்பட்டாலும் அதற்கு ஆக்ரோஷமாக அழுது அடம் பிடித்தாலும் அவர்கள் விர்ச்சுவல் ஒட்டிசம் எனப்படும் மெய்நிகர் ஒட்டிச பாதிப்பிற்கு ஆளாகி இருக்கக்கூடும்.
இதற்கு வைத்தியர்கள் குழந்தை பிறந்த ஆறு மாதத்தில் அவர்களுக்கு டிஜிட்டல் திரையை அறிமுகப்படுத்துவது தான் முதன்மையான காரணம் என்றும்.. ஆறு மாதத்திலிருந்து பிறக்கும் ஆண் பிள்ளையாக இருந்தாலும் சரி பெண் பிள்ளையாக இருந்தாலும் சரி கைபேசி- தொலைக்காட்சி - மடிக்கணினி- போன்ற இலத்திரனியல் சாதனங்களை நீண்ட நேரம் பார்த்தால் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். வேறு சில பிள்ளைகள் பெற்றோர்கள் நியுக்ளியர் ஃபேமிலியாக இருப்பதால்... பிள்ளைகளுடன் பேசுவதற்கு அவர்களுடைய மொழியில் பேசுவதை தவிர்த்து விடுவார்கள் அல்லது குறைவான நேரத்தில் மட்டுமே பேசுகிறார்கள். இதன் காரணமாகவும் அவர்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். வேறு சிலருக்கு அந்த வயதை ஒட்டிய சக பிள்ளைகளின் அறிமுகமும், அசலான நிலவியல் சார்ந்த தொடர்புகள் குறைவதாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
உங்களுடைய குழந்தை இரண்டரை வயது ஆகியும் பேச்சில் தாமதமோ... கவனித்தலில் குறைபாடு.. மற்றவர்கள் பேசும் போது எதிர்வினை ஆற்றாமல் இருந்தாலும்... கவலைப்படாமல் இலத்திரனியல் சாதனங்களின் பாவனையை உடனடியாக குறைத்து, குழந்தைகளுடன் பேசி சிரித்து மகிழ வைத்து, நிறைய நேரங்களை செலவிடுங்கள். பூங்கா- பொழுதுபோக்கு மையம் - குழந்தைகள் குழுமி இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுடன் பழக விடுங்கள். மிக அரிதாக பேச்சுப் பயிற்சியை வழங்குவதற்கான நிபுணர்களின் உதவியை நாடுங்கள். இவற்றை தொடர்ச்சியாக மேற்கொண்டால்... ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள் உங்களுடைய பிள்ளை இத்தகைய விர்ச்சுவல் ஒட்டிசத்திலிருந்து விடுதலையாகி ஏனைய குழந்தைகளை போல் இயல்பான பிள்ளைகளாக மாறுவார்கள். குழந்தைகளின் கற்றல் திறன்- குறிப்பாக மொழி- பண்பாட்டு சார்ந்த நடவடிக்கைகள்- கலாச்சாரம் சார்ந்த நடவடிக்கைகளை கற்றுக் கொள்வதில் கவனம் செலுத்தும் தருணம் என்பதால், பிள்ளைகளிடம் நேரத்தை செலவிட்டால்... அவர்களை ஆரோக்கியமான பிள்ளையாக மாற்றிட இயலும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் தனசேகர் தொகுப்பு அனுஷா.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM