ஈரானுடனான மோதல் மிக விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்து நம்பிக்கை தெரிவித்த ட்ரம்ப், “ஈரான் நாட்டினால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது” என்று ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“ஈரான் விடயத்தில் நான் மிக முக்கியமான நடவடிக்கை எடுக்கத் தொடங்கியபோது, அது மிகவும் அவசியமான ஒன்றாக இருந்தது. ஏனெனில், அவர்களிடம் அணு ஆயுதம் இருக்கக்கூடாது, இல்லையெனில், உலகம் முழுவதும் அழிந்துபோகும். அதை நாங்கள் அனுமதிக்கப் போவதில்லை. நாங்களோ அல்லது மத்திய கிழக்கோ மட்டுமல்ல, உலகம் முழுவதுமே அது ஒரு பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும். எங்களுக்கு வேறு வழியில்லை.
போர் முடிந்ததும் நான் காணும் சூழலின் அடிப்படையில் அந்த நல்ல நாட்களை நாம் விரைவில் மீண்டும் காண்போம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கிறேன். அவர்களால் இனி நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை” என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM