சிறைச்சாலை வன்முறைகள் அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியா? - சுஜீவ சேனசிங்க கேள்வி!

07 Aug, 2026 | 04:08 PM
image

(செ.கவிஷனா)

தற்போதைய அரசாங்கம் முழு நாட்டை நிர்வகிப்பதற்கு முன்னர் குறைந்தது நாட்டின் சிறைச்சாலைகளையாவது சரியாக நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். சிறைச்சாலைகளில் தொடரும் வன்முறைகள் மற்றும் மோதல்கள் வெறும் நிர்வாகத் திறமையின்மையா அல்லது அவசரகாலச் சட்டத்தை நீட்டிப்பதற்கான அரசாங்கத்தால் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படும் மறைமுகச் சதியா என்ற சந்தேகம் எழுகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (07) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்திடம் ஆட்சியைக் கொடுப்பதற்கு முன்னர் நாட்டின் சிறைச்சாலைகளை நிர்வாகிக்கும் பொறுப்பையாவது ஒப்படைத்திருக்க வேண்டும். சிறைக்குள் இருக்கும் கைதிகளையோ அல்லது சிறைச்சாலை அமைப்பைக் கூட நிர்வாகிக்க முடியாத தற்போதைய அரசாங்கத்தால் ஒட்டுமொத்த நாட்டையும் அதன் மக்களையும் எவ்வாறு சிறப்பாக பாதுகாப்பதற்கும் ஆட்சி செய்யவும் முடியும் என்பதை மக்கள் இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும்.  

சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இத்தகைய வன்முறைகளும் மோதல்களும் இடம்பெறுவது நிர்வாகத் திறமையின்மையால் மட்டுமா அல்லது இதன் பின்னணியில் அரசாங்கத்தின் மறைமுக சதித்திட்டம் எதுவும் இருக்கிறதா என்ற சந்தேகதம் தற்போது எழுகிறது.

நாட்டில் தொடர்ச்சியாக அசாத்தியமான அல்லது நிலையற்ற சூழலை உருவாக்கி, அதைக் காரணம்காட்டி அவசரகாலச் சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கும், பொதுமக்கள் மத்தியில் பயத்தை தூண்டி அவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கும் அரசாங்கமே இவ்வாறான சூழல்களைப் பயன்படுத்திக் கொள்கிறதா என்ற கோணத்திலும் கேள்விகள் எழுகின்றன.

மேலும், சிறைச்சாலைகளில் இத்தனை அசம்பாவிதங்களும் சட்ட ஒழுங்கு மீறல்களும் நடந்தேறிய பின்னரும், அதற்குப் பொறுப்பான துறைசார் அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்யாமல் தொடர்ந்து பதவியில் நீடிப்பது பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. அமைச்சர் பதவி விலகாமல் இருப்பதன் மூலம், சிறைச்சாலைக்குள் நடக்கும் இத்தகைய மோதல்கள் அவருடைய முழு அறிவோடும் விருப்பத்தோடும் தான் நடக்கின்றன என்று எண்ண தோன்றுகிறது.

நீதிமன்றத்தால் குறிப்பிட்ட ஆண்டுகள் தண்டனை பெற்றவர்களோ அல்லது வழக்கு விசாரணை முடிவடையாமல் பிணை மறுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களோ, சிறை வளாகத்திற்குள் மரணமடையும் அல்லது கொல்லப்படும் ஆபத்தான சூழல் நிலவுவது நாட்டின் சட்டத்தின் ஆட்சிக்கும் நீதித்துறைக்கும் விழுந்த பேரிடியாகும்.

தவறு செய்தவர்களுக்குச் சட்டப்படி நீதிமன்றமே தண்டனை வழங்க வேண்டுமே தவிர, சிறைச்சாலைக்குள்ளேயே அவர்களுக்கு மறைமுக மரண தண்டனை கிடைக்கும் நிலைமை உருவாகக் கூடாது. இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது உண்மையான நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08