சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த சதி: அமைச்சர் ஆனந்த விஜேபால எச்சரிக்கை!

07 Aug, 2026 | 04:07 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

சிறைச்சாலை  கட்டமைப்பை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான மோதல்களினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. சிறைச்சாலை கட்டமைப்பை பாதுகாக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்  பாராளுமன்ற  அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அமர்வின்போது  சிறைச்சாலைகள் மோதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலைத் தொடர்ந்து மஹர,  வெலிகட மெகசின் , குருவிட்ட மற்றும்  பள்ளன்சேன ஆகிய சிறைச்சாலைகளிலும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஆரம்பமான மோதல் தற்போது கட்டம் கட்டமாக   வளர்ச்சிப் பெற்றுள்ளது.

 கிடைக்கப்பெற்றுள்ள புலனாய்வுத் தகவல்கள் மற்றும்  அறிக்கைகளுக்கு அமைய இவை திட்டமிட்டதொரு செயற்பாடு என்பதுடன், சிறைச்சாலை கட்டமைப்பை  பலவீனப்படுத்தும் செயற்பாடுகள் என்ற சந்தேகம் காணப்படுகிறது.  போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு இந்த  மோதல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

நேற்று  வியாழக்கிழமை (07) இரவு வெலிகட சிறைச்சாலையில்  10.15 மணியளவில் 40 பேர் ஒன்றிணைந்து  பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.இந்த நிலைமையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டது.இந்த சம்பவத்தில் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

குருவிட்ட  சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்த நிலையில், 15 பேர் காயமடைந்து இரத்தினபுரி சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். சிறைச்சாலைகளில் ஏற்படும்  இவ்வாறான மோதல்களை கட்டுப்படுத்தும் போது கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய கவனம் செலுத்தியுள்ளோம்.

பள்ளன்சேன சிறைச்சாலையில் 30 இற்கும் மேற்பட்ட கைதிகள்  காலை உணவுக்காக வெளியில்  செல்ல அனுமதியளித்த போது அவர்கள் கட்டம் மேல் ஏறி  போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.   சிறைச்சாலை கட்டமைப்பை பலவீனப்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்ட வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான மோதல்களினால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08