விலை அதிகரிப்புக்கு மத்தியில் அரசின் சமூக நலன்புரிக் கொள்கை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கப் போதுமானதா? - சஜித் கேள்வி 

07 Aug, 2026 | 03:06 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் அரசின் சமூக நலன்புரிக் கொள்கை மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைக்கப் போதுமானதா என கேட்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (7) நிலையியற்கட்டளை 27(2)இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதாகவும் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறது. ஆனால் சமூக நலன்புரியின் அடிப்படை நோக்கம் மக்களின் வாழ்வுரிமையை மேம்படுத்துவதும் பொருளாதார நெருக்கடிக்குள்ளாகும் குடும்பங்களுக்குப் போதுமான பாதுகாப்பைப் பெற்றுக் கொடுப்பதுமாகும். தற்போது அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதோடு, உண்மையான வருமானமும் குடும்பங்களின் கொள்வனவு சக்தியும் வீழ்ச்சி கண்டு, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்கள் கடுமையான வாழ்க்கைச் சுமைக்கு முகங்கொடுத்துள்ளன.

இதனால்தான், அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் சமூக நலன்புரி கொள்கைகளும் திட்டங்களும் மக்களின் வாழ்க்கைச் செலவு அழுத்தத்தைக் குறைக்கவும், அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உண்மையாகவே மேம்படுத்தவும் போதுமானதாக அமைந்து காணப்படுகின்றதா என்பது குறித்து அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் 

அரசாங்கத்திடம் உள்ள புதிய உத்தியோகபூர்வ தரவுகளின்படி, இலங்கைக் குடும்பமொன்று தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான சராசரி வாழ்க்கைச் செலவு என்ன என்பதை இந்த சபைக்கு சமர்ப்பியுங்கள். இந்தச் செலவு சராசரி குடும்பமொன்றின் மாதாந்த வருமானத்துடன் ஒப்பிடும்போது தாங்கிக்கொள்ளக்கூடிய மட்டத்தில் உள்ளதா என்பதற்கான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ மதிப்பீட்டை முன்வையுங்கள். 

கடந்த மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பணவீக்கம் முறையே 5.5 வீதம், 6.8 வீதம் மற்றும் 7.3 வீதமாக பதிவாகியுள்ள நிலையில், அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அழுத்தத்தினால் சாதாரண மக்களின் கொள்வனவுச் சக்தி வீழ்ச்சியடைந்துள்ளமை தொடர்பில் அரசாங்கத்தின் மதிப்பீட்டை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக மக்கள் கடன்களை பெரிதும் சார்ந்து வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நிலையான வைப்புகள் மீதான வட்டி விகிதங்கள் வீழ்ச்சியடைந்ததன் மூலம் ஓய்வுபெறுவோர் மற்றும் சேமிப்புக்களை நம்பியிருப்பவர்களின் வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளது. 

இந்த இரண்டு தரப்பினரும் முகங்கொடுக்கும் பொருளாதார அழுத்தத்தைக் குறைப்பதற்கு அரசாங்கத்திடம் உள்ள வேலைத்திட்டம் என்னவென்பதை முன்வைக்குமாறும், 2026 மார்ச் நிலவரப்படி சமூக நலன்புரிப் பயனாளிகள் சபை ஊடாக 1,695,843 குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்களாக அடையாளம் காணப்பட்டிருக்கிறது. 

சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை மீதியை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 2.3 வீதமாக  இருக்க வேண்டும் எனக் கூறிய போதிலும், அதனை 5.4 வீதமாக உயர்த்தியதற்கான காரணம் என்னவென்று கேட்கிறோம். அரச வருமான இலக்கை 13.9 வீதத்திலிருந்து 15.4 வீதமாக உயர்த்தியது எதற்காக என கேட்கிறோம். 2025ஆம் ஆண்டுக்கான வீட்டுவசதி வருமானச் செலவு மதிப்பீட்டு முடிவுகள் 2026 ஒக்டோபரில் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளதால், இதன் ஆரம்பத் தரவுகளை அரசாங்கம் சபையில் சமர்ப்பிக்க வேண்டும். அதேநேரம் இந்தத் தரவுகள் 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்க பயன்படுத்தப்படவுள்ளதா எனவும் கேட்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப்பட்டி கட்டாயம்: செப்டெம்பர்...

2026-09-08 12:50:56
news-image

பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் சங்கத்தினரால் முன்வைக்கப்படும்...

2026-09-08 17:21:19
news-image

அரச பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கோரி...

2026-09-08 12:52:20
news-image

22ஆவது அரசியலமைப்பு திருத்தம்: ஜனாதிபதியின் கூற்றில்...

2026-09-08 14:55:10
news-image

2029இல் அநுர, குமார் குணரத்தினம், சீலரத்ன......

2026-09-08 15:49:13
news-image

அதிவேகமாக ஜனநாயகத்தை அழித்து வருகிறது அரசு...

2026-09-08 16:17:06
news-image

வடக்கில் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் பற்றாக்குறையை...

2026-09-08 16:28:53
news-image

பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 3 மாதங்களுக்கு...

2026-09-08 16:31:25
news-image

ஜனாதிபதியும் 159 உறுப்பினர்களும் மட்டுமே சுபீட்சமாக...

2026-09-08 16:48:21
news-image

ஆயுதமோதலின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பொறுப்புக்கூறலில் முன்னேற்றமில்லை!...

2026-09-08 19:09:11
news-image

ஜனாதிபதியின் தலைமையில் அரச இலக்கிய விருது...

2026-09-08 21:31:51
news-image

சுருக்குவலை மீன்பிடிப் படகுகளுக்கான அனுமதிப்பத்திரம் ஒரே...

2026-09-08 18:00:08