அமெரிக்காவில் குடியேற்ற விண்ணப்பங்களுக்கு புதிய கடும் கட்டுப்பாடுகள் அமுல்

07 Aug, 2026 | 10:41 AM
image

அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு (USCIS) குடியேற்ற விண்ணப்பங்களை பரிசீலிக்கும் விதத்தில் புதிய கடுமையான மாற்றங்களை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

போதிய சான்றுகளோ அல்லது தேவையான ஆவணங்களோ இல்லாமல் தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை, எவ்வித முன்னறிவிப்பும் இன்றி உடனடியாக நிராகரிக்க அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் விண்ணப்பங்களில் ஏதேனும் தவறுகள் அல்லது ஆவணக் குறைபாடுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்து மீண்டும் சமர்ப்பிக்க 12 வாரங்கள் (3 மாதங்கள்) கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இனி அந்த அவகாசம் கிடையாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

புதிதாக தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமின்றி, ஏற்கனவே நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கும் இந்த புதிய விதிமுறைகள் பொருந்தும் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

முழுமையற்ற விண்ணப்பங்களை தாக்கல் செய்து, அந்த அவகாசத்தைப் பயன்படுத்தி பணி அனுமதி உள்ளிட்ட சலுகைகளை முறையற்ற வழிகளில் சிலர் பெற்று வருவதாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

6G தொழில்நுட்பம்: அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய...

2026-09-08 12:46:35
news-image

‘நியூ மெக்சிகோ’வை ‘நியூ அமெரிக்கா’ என...

2026-09-08 12:29:15
news-image

உலகளவில் மெட்ரோ ரயில் வலையமைப்பில் இந்தியா...

2026-09-08 11:05:50
news-image

இந்தோனேசியாவில் விமானப் போக்குவரத்து மீண்டும் ஆரம்பம்

2026-09-08 10:10:53
news-image

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சிறிய ரக...

2026-09-08 09:37:44
news-image

2026க்கான உலக அழகு ராணி: தமிழர்களின்...

2026-09-07 20:55:14
news-image

மக்கள் தீர்ப்பை ஏற்காதவர்கள் ஏன் அரசியலில்...

2026-09-07 16:20:54
news-image

நேபாளத்தில் 1,340 பேரை பலிகொண்ட பேரழிவு...

2026-09-07 15:49:43
news-image

மெக்சிக்கோவில் மதச் சடங்கில் வெடிவிபத்து :...

2026-09-07 11:14:55
news-image

இந்தோனேசியாவில் தொடரும் அனக் கிரக்கடோவா எரிமலை...

2026-09-07 11:40:49
news-image

இந்தியாவில் ஒருகாலத்தில் "நாய்ப்பழம்" எனக் கைவிடப்பட்ட...

2026-09-07 09:53:36
news-image

அமெரிக்காவில் அமேசான் சரக்கு விமானம் விபத்து...

2026-09-07 11:47:43