பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன சத்திர சிகிச்சை

06 Aug, 2026 | 06:37 PM
image

எம்மில் சிலருக்கு பித்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டு, விவரிக்க இயலாத துயரங்களை எதிர்கொள்வர். இத்தகைய பாதிப்பிற்கு தற்போது நவீன வைத்திய தொழில் நுட்பங்களுடன் கூடிய பிரத்யேக காந்த அதிர்வலை சத்திர சிகிச்சை கண்டறியப்பட்டு, பலனளித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக பித்த நாளங்களில் அடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதற்காக சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது, சிகிச்சைக்குப் பின்னர் சில விவரிக்க இயலாத அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும்.

இந்நிலையில் தற்போது வைத்தியர்கள் கண்டறிந்திருக்கும் மேக்னெட்டிக் கம்ப்ரஷன் அனஸ்டோமோசிஸ் எனும் நவீன சிறிய அளவிலான சத்திர சிகிச்சை மூலம் இத்தகைய பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

இத்தகைய சிகிச்சையின் போது பாதிப்பு அடைந்த பித்த நாளங்களின் இரு முனைகளில் காந்த ஈர்ப்பு சக்தி கொண்ட குழாய்கள் பொருத்தப்பட்டு, அதன் மூலம் காந்த சக்தியை செலுத்தி, அடைப்பை நீக்கி, இயல்பான இணைப்புகளை உருவாக்குகின்றனர்.

வெவ்வேறு உடல் நல கூறியல் காரணமாக பித்த நாள அடைப்பு பாதிப்பை சீராக்க இத்தகைய காந்த சக்தியின் மூலம் அடைப்பை நீக்கும் சிகிச்சையை மேற்கொள்கிறார்கள். இதன் மூலம் உடலில் பொருத்தப்படும் இரு காந்த முனைகள் ஈர்ப்பு விசையின் காரணமாக திசுக்கள் மீது அழுத்தம் கொடுத்து, அதனை அப்புறப்படுத்துகின்றன.

இத்தகைய நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்ட பிறகு வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக கடைப்பிடிக்கும் போது மீண்டும் இத்தகைய பாதிப்பு நிகழாமல் உற்சாகமான மன நிலையுடன் வாழ்க்கையை வாழ இயலும்.

வைத்தியர் ரேலா

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22
news-image

சிறுநீர் குழாய்களில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பிற்குரிய...

2026-08-27 16:38:50
news-image

பெரிபெரல் அர்டரி டிஸீஸ் எனும் காலில்...

2026-08-26 16:35:50