நீதிமன்ற உத்தரவை மீறி அம்பாந்தோட்டையில் கூட்டு எதிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க நாமல் ராஜபக்ச சற்று முன் பொலிஸில் சமுகமளித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை கூட்டு எதிரணியினர் அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதற்கான அனுமதியை நீதிமன்றம் இரத்துச் செய்திருந்தது.

இருந்தபோதும், திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்களாகக் கருதி, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, டி.வி.சானக்க, பிரசன்ன ரணவீர உள்ளிட்ட சிலரை விசாரணைக்காக பொலிஸில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சற்று முன் நாமல் ராஜபக்ச, சானக்க, பிரசன்ன உட்பட ஆறு பேர் அம்பாந்தோட்டை பொலிஸில் ஆஜராகினர்.

இதேவேளை அம்பாந்தோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது குழப்பம் விளைவித்த மேலும் ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.