பண தடையை நீக்கும் பிரத்யேக குறிப்பு

06 Aug, 2026 | 06:15 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலருக்கும் காலையில் கண்விழித்ததும் பண தேவைகள் குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்தும் யோசித்துக் கொண்டே எழுவார்கள். சிலருக்கு பல இடங்களில் இருந்து சிறிய அளவிலான தொகைகள் வரவேண்டியது இருக்கும். ஆனால் அது சரியான தருணத்தில் வராமல் உளவியல் சோர்வை தொடர்ந்து வழங்கும்.

இந்நிலையில் வரவேண்டிய பணம் உரிய தருணத்தில் வந்து அதற்கான முறையான பலனை பெற வேண்டும் என்றால் அதற்கும் எம்முடைய முன்னோர்கள் சில சூட்சமமான வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு தேவையான பொருட்கள் : பச்சை கற்பூரம் -பச்சை சோம்பு -பச்சை ஏலக்காய் -பட்டு வண்ண துணி- நெய் தீபம்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பச்சை கற்பூரம் -பச்சை ஏலக்காய்- பச்சை சோம்பு- ஆகிய இந்த மூன்று பொருட்களை சிறிய அளவில் வாங்கி அதை பட்டு வண்ண துணியில் கட்டி உங்களுடைய பணப்பெட்டிக்குள் வைத்து விடுங்கள்.

இதைத்தொடர்ந்து அருகில் இருக்கும் அரச மரத்தடி விநாயகரை தொடர்ந்து பதினைந்து நாட்கள் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.

அதில் உங்களுடைய பண வரவிற்கான தடை நீங்க வேண்டும் என்ற பிரார்த்தனையையும் இணைத்துக் கொண்டால் தடையின்றி நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு தன வரவு கிடைக்கும். அத்துடன் நீங்கள் கொடுத்த பணமும் உரிய கால அவகாசத்தில் திரும்ப கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28
news-image

தனவரவு தங்குதடையின்றி கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-08-25 17:21:17
news-image

உறவுகளின் மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும் பிரத்யேக...

2026-08-24 16:27:53