ஃபேண்டஸி அட்வென்சராக தயாராகும் சந்தீப் கிஷனின் 'கரிகாலா'

06 Aug, 2026 | 05:59 PM
image

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களிடம் பிரபலமான நட்சத்திர நடிகர் சந்தீப் கிஷன் கதையின் நாயகனாக-  சாகச நாயகனாக நடித்திருக்கும் 'கரிகாலா'  திரைப்படத்தின் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கு இயக்குநர் யுகேந்தர் முனி இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'கரிகாலா' திரைப்படத்தில் சந்தீப் கிஷன் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். பிரவீண் கே. பங்காரி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ சரண் பகாலா இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜேனரிளான இந்த திரைப்படத்தை ஷைனிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி - ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் இதன் அறிமுக போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகன் புராண காலகட்ட நாயகனின் தோற்றத்துடன் சிங்கத்தை விரட்டிச் சென்று வேட்டையாடுவதற்கு கையில் ஆயுதத்துடன் குதிரையில் செல்வது போல் வடிவமைக்கப்பட்டிருப்பதால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படம் தமிழ்- தெலுங்கு - இந்தி - ஆகிய மொழிகளில் இரண்டு பாகங்களாக வெளியாகிறது என்றும், இதில் முதல் பாகம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டாம் திகதி அன்று வெளியாகும்  இதைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி அன்று வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலகட்டத்தில் படைப்பாளிகள் தங்களுக்கான கற்பனை உலகத்தை பார்வையாளர்கள் வியந்து ரசிக்கும் வகையில் உருவாக்குவது ‌எளிதாகச் சாத்தியப்பட்டிருப்பதால்... இத்தகைய கதைகள் வெளியாகி, ரசிகர்களை கவர்கிறது.  அந்த வகையில் சந்தீப் கிஷனின் 'கரிகாலா' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் செல்வன் நடிக்கும் 'அன்பில் அவன்'...

2026-09-08 16:47:24
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-09-08 16:21:32
news-image

நடிகர் ஆர்யா வெளியிட்ட பாரதிராஜாவின் 'புலவர்'...

2026-09-08 16:16:50
news-image

காந்தாரா புகழ் நடிகர் ரிஷப் ஷெட்டி...

2026-09-08 16:12:43
news-image

நடிகர் கருணாஸ் நடிக்கும் என்ன விலை...

2026-09-08 15:45:39
news-image

நடிகர் ஜெய் நடிக்கும் #AGS29 திரில்லர்...

2026-09-07 17:01:08
news-image

நடிகை அபிநயா நடித்திருக்கும் 'ஹோப்- HOPE' ...

2026-09-07 17:00:52
news-image

ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்த 'மொத...

2026-09-07 16:47:56
news-image

நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் 'டாடா -...

2026-09-07 16:46:49
news-image

கடவுள் தந்த பரிசு' படத்தில் மூலம்...

2026-09-07 16:26:51
news-image

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய...

2026-09-07 16:24:36
news-image

தனுஷின் 'ஓம் 'திரைப்படத்தில் நடிக்கும் மம்முட்டியின்...

2026-09-07 16:24:25