(செ.கவிஷனா)
2026 ஆம் ஆண்டுக்கான அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை (07) வெள்ளிக்கிழமை நிறைவடையும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக்கான முதலாம் கட்டம் நாளை (07) ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதுடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதியன்று நிறைவடையவுள்ளது.
அத்துடன், அனைத்து பாடசாலைகளுக்கும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி திங்கட்கிழமை அன்று ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதியுடன் மூன்றாம் தவணை நிறைவடைகிறது. மேலும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சையானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM