காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு வாசல் வளைவு

06 Aug, 2026 | 04:52 PM
image

அலங்காரக் கந்தனாம் நல்லூர் ஶ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் அழகை மேலும் மேருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்குப் திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு', ஆடிக் கார்த்திகை நன்னாளான இன்று வியாழக்கிழமை  (06) தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் கண்டது.

காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் வந்து தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, முருகப்பெருமானுக்காக எடுத்துவரப்பட்ட நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் சென்றது.

அந்த மங்கள நிகழ்வின் மூலம் 'நல்லூரான் வடக்கு வாசல் வளைவு' காண்பிய விரிப்புக் காண்டது.

இந்த நிகழ்வில் முருகனடியவர்கள் வடமாகாண ஆளுநர், யாழ். மாநகர முதல்வர் , யாழ். மாநகர ஆணையாளர், வடமாகாண பிரதி பிரதம செயலாளர் என பலர் கலந்துகொண்டனர்.

படங்கள் - ஐ. சிவசாந்தன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொகவந்தலாவை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்...

2026-08-14 18:51:37
news-image

செஞ்சோலை வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கு...

2026-08-14 10:51:28
news-image

BestWeb.LK 2026 விருதில் OneDriver.lk வெள்ளிப்...

2026-08-13 15:32:03
news-image

சைவ மங்கையர் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு...

2026-08-12 14:38:57
news-image

கொழும்பு காக்கைதீவு இந்து மன்றத்தின் ஆடி...

2026-08-12 13:57:36
news-image

பாணந்துறை ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஆடி...

2026-08-12 13:57:02
news-image

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய ஆடி அமாவாசை...

2026-08-12 13:53:37
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் ஆடி அமாவாசை...

2026-08-12 13:26:38
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் பஞ்சரத பவனி

2026-08-12 11:34:41
news-image

அயர்லாந்து பாடசாலை மாணவர்களுக்கான‌ கையெழுத்துப்போட்டி

2026-08-11 14:05:25
news-image

மாமாங்கேஸ்வரர் ஆலய "தேர்" திருவிழா

2026-08-11 13:38:47
news-image

வவுனியாவில் சிறப்பாக நிகழ்ந்த சர்வதேச சகோதரிகள்...

2026-08-11 05:45:50