விஜய் தலைமையிலான தமிழக அரசின் வேளாண்மை துறைக்கான முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல்

06 Aug, 2026 | 04:20 PM
image

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முதன்முறையாக 2026 27 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று வேளாண்மை துறைக்கான நிதிநிலை அறிக்கையை அத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்.

* விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்குவதற்காக நீலகிரியில் பிரத்யேக வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்

* உழவர் சந்தைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு

* வேளாண் துறைக்கான நுண்ணறிவு மற்றும் சந்தை மையம்

* வான் மகள் திட்டம்

* துளித்துளி தண்ணீர் திட்டம்

* ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் சேமிப்பு கிடங்கு வசதிகளை மேம்படுத்துதல்

* மதிப்புக்கூட்டு பொருளை மேம்படுத்துவதற்கான பிரத்யேக வணிக வளாகங்கள் மற்றும் கட்டமைப்புகள் உருவாக்கம்.

* விவசாயிகளின் வருமான மேம்பாட்டு ஆணையம்

* தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம்

* கடலோர மாவட்டங்களில் நன்னீர் கிணறுகள் அமைத்தல்

* வேளாண் இயந்திரங்களை பழுது நீக்கி பராமரிக்கும் மையங்கள் அமைத்தல்

* பண்ணை குட்டைகள் உருவாக்குதல்

* நம்மாழ்வார் பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டய படிப்பு கல்லூரி உருவாக்கம்

* வேளாண் விளைப் பொருட்களுக்கு 100 சதவீதம் பயிர் காப்பீடு

* மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றியாளருக்கு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும்.

* வெற்றி விவசாய விருது வழங்கப்படும்.

* நம்மாழ்வார் விருது வழங்கப்படும்

* தமிழ்நாடு மண்வள பாதுகாப்பு இயக்கம் உருவாக்கப்படும்.

* கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டம்

* பனை பாதுகாப்பு இயக்கம்

* வெற்றி இல்லத்தரசி வீட்டுத் தோட்டம்

* செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய உழவர் செயலி

* ஒரு கோடி விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும்.

* பருத்தி மறுமலர்ச்சி இயக்கம் உருவாக்கப்படும்

* மக்கா சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

* அண்ணல் அம்பேத்கார் வேளாண் உதவி திட்டம் செயல்படுத்தப்படும்.

* விவசாயிகளுக்கான மும்முனை இலவச மின்சாரம் தொடரும்.

* இயற்கை வேளாண் தொகுப்பு உருவாக்கப்படும்.

" 2026 27 ஆம் ஆண்டில் 131 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்திக்கான இலக்கு நிர்ணயம்.

* விவசாய நிலங்களின் பசுமைக்காக வேளாண் காடுகள் திட்டம் செயல்படுத்தப்படும்.

* தமிழ்நாடு தளிர் கீரைகள் திட்டம்

* மருத்துவ பயிர்கள் சாகுபடி ஊக்குவிப்பு திட்டம்

* வெங்காய சேமிப்பு கிடங்குகள் அமைக்க நிதி ஒதுக்கீடு

* விவசாயிகள் ஆழ்துளை மற்றும் குழாய் கிணறுகள் அமைக்க மானியம் வழங்கப்படும்.

இப்படி வேளாண் துறைக்கான பல்வேறு அம்சங்கள் இந்த நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரான வினோத் வேளாண் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன் முதல்வர் ஜோசப் விஜய்யை சந்தித்து வாழ்த்துகளை பெற்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிரான்ஸ் கடற்கரைகளை ஆக்கிரமிக்கும் காட்டுப்பன்றிகள்

2026-08-14 16:37:03
news-image

உக்ரைனில் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்...

2026-08-14 14:28:18
news-image

‘ஏர் இந்தியா’ விமானிகள் அனைவருக்கும் போதைப்பொருள்...

2026-08-14 14:16:43
news-image

சீனாவின் C919 விமானம் முதன்முறையாக சர்வதேச...

2026-08-14 14:25:24
news-image

அமெரிக்காவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே...

2026-08-14 13:03:18
news-image

ஜப்பானில் கடும் மழை: நரிட்டா விமான...

2026-08-14 12:35:25
news-image

வயது அதிகரிப்பதற்காக அவசரப்பட்டு திருமணம் செய்யக்...

2026-08-14 12:14:55
news-image

கடந்த ஒரு மாதமாக குளத்திலேயே வாழும்...

2026-08-14 12:03:02
news-image

இந்தியாவில் ஆபாச வீடியோ அழைப்பு மையம்...

2026-08-14 11:50:33
news-image

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: மத்திய...

2026-08-14 10:31:49
news-image

சிறுமி மீதான மனிதக் கடத்தல், பாலியல்...

2026-08-14 10:54:38
news-image

கொங்கோவில் எபோலாவால் 2,000 பேர் உயிரிழப்பு...

2026-08-13 17:36:33