தனியார் துறைக்கு மட்டும் டெங்கு தடுப்பூசி அனுமதி - விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ குற்றச்சாட்டு

06 Aug, 2026 | 04:05 PM
image

(செ.கவிஷனா)

சிறுவர்களை இலக்காகக் கொண்டு டெங்கு  நோயைக்    கட்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் கியூ டெங்கு - டாக் 003 (Qdeng – Tak 003) தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்குத் தனியார் துறைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழக்கிழமை (06) இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய ஔடதங்கள் ஒழுங்குமுறை அதிகார சபையினால் இந்த தடுப்பூசிக்கு நாட்டுக்குரிய பொதுவான அனுமதி வழங்கப்படாத ஒரு பின்னணியில், தனியார் துறைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருப்பது, அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்குச் செய்யப்படும் மிகப்பெரிய அநீதியாகும். இது நாட்டின் இலவச சுகாதாரச் சேவையின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்தக் 'கியூ டெங்கு - டாக் 003' தடுப்பூசியானது டெங்கு நோயின் தாக்கம் தீவிரமாக காணப்படக்கூடிய பகுதிகளில் வாழும் 6 முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே தடுப்பூசியாகும்.

இத்தடுப்பூசியானது தோலின்கீழ் உள்ள கொழுப்புப் பகுதியில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு, உடலினால் மெதுவாக உறிஞ்சப்படுவதன் மூலம் டெங்கு நோய்க்கு எதிரான வலுவான நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்குள் உருவாக்குகிறது. டெங்கு நோயில் இருந்து ஒரு சிறுவனுக்குப் முழுமையான பாதுகாப்பைப் பெற வேண்டுமாயின், 3 மாத இடைவெளியில் மொத்தம் இரண்டு தடுப்பூசி டோஸ்களை செலுத்த வேண்டியது அவசியமாகும்.

தற்போது சர்வதேச சந்தையில் ஒரு தடுப்பூசிக் குப்பியின் விலை சுமார் 80 அமெரிக்க டொலர்களாகக் காணப்படுகிறது. இதற்கமைய இலங்கையில் ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை 30,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு சிறுவன் முழுமையான தடுப்பூசிப் பாடநெறியைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் இரண்டு டோஸ்களுக்கும் சேர்த்து மொத்தம் 60,000 ரூபாய் வரை செலவிட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான்.

இதனால், அரச வைத்தியசாலைகளை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கும் சாதாரண வசதியற்ற குடும்பங்களால் இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்துத் தடுப்பூசியைப் பெற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41
news-image

மசகு எண்ணெய் விலை 80 டொலரில்...

2026-08-18 13:46:17
news-image

நாட்டை பிளவுபடுத்தும் 22ஆவது திருத்தம் ;...

2026-08-18 19:10:50