தமிழ் ஊடக வரலாற்றில் தனித்துவமான பாதையில் பயணித்து வரும் வீரகேசரி நாளிதழின் 96ஆவது ஆண்டு நிறைவையொட்டி, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உப பொதுச் செயலாளர் மௌலவி நாகூர் ளரீஃப் பீ.ஏ. (சிறப்பு) தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலாக செய்தி ஊடகப் பணியை ஒரு தொழிலாக மட்டுமன்றி, சமூகப் பொறுப்புமிக்க சேவையாகக் கருதி, உண்மை, நம்பகத்தன்மை மற்றும் நடுநிலைமை ஆகிய அடிப்படை விழுமியங்களுடன் வீரகேசரி தனது பயணத்தை தொடர்ந்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலத்தின் மாற்றங்களையும் சவால்களையும் எதிர்கொண்டு, அச்சு ஊடகத்திலிருந்து இலத்திரனியல் ஊடக உலகிற்கும் வெற்றிகரமாக விரிவடைந்து, உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தகவல் ஊடகமாக வீரகேசரி திகழ்வது பாராட்டுக்குரிய சாதனை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு சமூகத்தின் வளர்ச்சி மற்றும் விழிப்புணர்வில் ஊடகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன எனக் குறிப்பிட்டுள்ள அவர், மக்களின் குரலாகவும், அவர்களின் உணர்வுகள் மற்றும் அபிலாஷைகளை வெளிப்படுத்தும் தளமாகவும் வீரகேசரி செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசியல், சமூக, கல்வி, பொருளாதார, கலாசார மற்றும் சமயத் துறைகளில் இடம்பெற்ற பல்வேறு மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகளை பதிவு செய்து, வீரகேசரி வரலாற்றுச் சாட்சியாக தனது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை, கல்வி மேம்பாடு மற்றும் மனிதநேயப் பண்புகளை ஊக்குவிக்கும் ஆக்கங்கள் ஊடாக சமூகத்திற்கு ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களை வழங்கி வரும் வீரகேசரியின் பணி மேலும் வலுப்பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 96 ஆண்டுகால வீரகேசரியின் பயணம் என்பது வெறும் கால அளவல்ல என்றும், அது அர்ப்பணிப்பு, தியாகம், தொழில்முறை நேர்மை மற்றும் வாசகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையின் அடையாளம் என்றும் மௌலவி நாகூர் ளரீஃப் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றிப் பயணத்தில் பங்களித்த ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள், நிர்வாகத்தினர், பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ள அவர், வீரகேசரி நூற்றாண்டை நோக்கிய பயணத்தில் மேலும் பல சாதனைகளைப் படைத்து தமிழ் மொழிக்கு சிறந்த சேவைகளை வழங்க இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM