கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுவிஸ்லாந்தில் அகதிகள் முகாமில் சுட்டுக்கொல்லப்பட்ட முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் கரன் என்பவரின் வீட்டிற்கு இன்று சுவிஸ்லாந்து தூதரக அதிகாரி ஒருவர் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
இலங்கைக்கான சுவிஸ்லாந்து தூதரகத்தின் வடக்கு, கிழக்கு பிராந்திய அரசியல் பிரிவு அதிகாரி சுஷாந்தினி கோபலகிருஷ்ணன் அவர்கள் நேரில் சென்று உயிரிழந்த குடும்பஸ்தரின் உறவுகளுடன் கலந்துரையாடியதோடு தனது ஆறுதலையும் தெரிவித்தார்.
அவர்களிடம் இது தொடர்பாக மேற்கொண்டு ஆறுதல் கூறிய சுஷாந்தினி,
“சுவிஸ்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர் தொடர்பில் இது வரையில் இலங்கை சுவிஸ் தூதரகத்திற்கு மேலதிக விடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை, குறித்த சம்பவம் தொடர்பாக சுவிஸ் அரசாங்கத்துடன் தொடர்பில் இருக்கின்றோம். இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஒழுங்கான முறையில் நடைபெறும்.
சுட்டுக் கொல்வது என்பது தவறு என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் பணிப்பின் பேரிலேயே நாம் இன்று சுட்டுக்கொல்லப்பட்டவரின் குடும்ப நிலைமைகளை நேரில் கண்டு ஆராய்வதற்காகவே வந்தோம். தந்தையை, சகோதரனை, கணவனை இழந்து தவிக்கும் உங்களின் வலிகளை புரிந்துகொள்கிறோம். உங்கள் நிலைமை தொடர்பில் சுவிஸ் அரசிற்கு அறிவிப்போம்” என உயிரிழந்தவர்களின் உறவுகளிடம் கூறினார்.
தூதரக அதிகாரியினை பார்த்து உயிரிழந்தவரின் உறவுகள் கதறி அழுது தமது வேதனையை வெளிப்படுத்தியதோடு சுட்டுக்கொல்லப்பட்ட தமது தந்தைக்கு உரிய பதிலை வழங்குமாறும் தமது தந்தையை சுவிஸ் பொலிஸார் சுட்டுக்கொன்றது ஏன் எனவும் சுட்டுக்கொல்லும் அளவிற்கு தமது தந்தை தவறு செய்திருக்க மாட்டார் எனவும் கொலை செய்யப்பட்டவரின் பிள்ளைகள் கதறி அழுதனர்.
மேலும் தமது தந்தை தொடர்பில் சுவிஸ் அரசு நீதியான விசாரணையை நடாத்த வேண்டும் எனவும் உயிரிழந்த தமது தந்தை தொடர்பாக நடக்கும் விசாரணைகளை தம் குடும்பத்தின் சார்பில் தாம் சுவிஸ் சென்று ஆராய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM