வீரகேசரி பத்திரிகை இலங்கை மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து, தமிழ் பேசும் சமூகத்தின் குரலாகவும், அவர்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் முதன்மைத் தளமாகவும் திகழ்ந்து வந்திருப்பது பாராட்டத்தக்கதாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி பத்திரிகை தனது 96ஆவது ஆண்டு விழாவை இன்று (06) வியாழக்கிழமை கொண்டாடுகின்ற நிலையில் அதற்கு வாழ்த்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது வாழ்த்துச் செய்தியில்,
இலங்கையின் முன்னணி தமிழ் தேசியப் பத்திரிகையான வீரகேசரி, அதன் 96 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த சிறப்புமிக்க தருணத்தில், அதன் முகாமைத்துவம், ஆசிரியர் குழு மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 96 ஆண்டுகளாக இலங்கை மக்களின் வாழ்வோடு ஒன்றிணைந்து, ஒரு பத்திரிகை என்ற வகையில் வீரகேசரி, தமிழ் பேசும் சமூகத்தின் குரலாகவும், அவர்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் முதன்மைத் தளமாகவும் திகழ்ந்து வந்திருப்பது பாராட்டத்தக்கதாகும்.
ஊடகத்துறை வேகமாக மாற்றம் கண்டு வரும் நவீன சவால்களுக்கு மத்தியிலும், உண்மையான தகவல்களை வழங்கி வாசகர்களின் நம்பிக்கையை வென்றுள்ள வீரகேசரி பத்திரிகை, எதிர்காலத்திலும் தனது உயரிய ஊடகச் சேவையைத் தொடரவேண்டும் என வாழ்த்துவதோடு, சமூகத்துக்குத் தேவையான ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தொடர்ந்து முன்னெடுத்து, இன்னும் பல மைல்கற்களை எட்ட வேண்டும். வீரகேசரியின் 96 ஆண்டு கால சாதனைகளைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படும் சிறப்பு மலரும், வீரகேசரியின் பணியும் மென்மேலும் சிறக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM