வேகமாக வளர்ந்து வரும் ஊடக கலாசாரத்துக்கு மத்தியில், வீரகேசரி ஊடகவியலின் தர்மங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு, மாறும் காலத்துக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஊடக தர்மங்களை உயர்த்திப் பிடிக்கும் அதேவேளையில், பல தசாப்தங்களாகத் தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பயணிப்பது சாதாரண சாதனையல்ல என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
வீரகேசரி பத்திரிகை தனது 96 ஆவது ஆண்டு விழாவை இன்று கொண்டாடுகின்ற நிலையில் இந்தியாவின் சார்பில் அதற் கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
இலங்கையின் முன்னணி தமிழ் நாளிதழ்களில் ஒன்றான 'வீரகேசரி' தனது 96ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நன்னாளில் எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன1930 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 9 தசாப்தங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து பயணித்து வரும் வீரகேசரியின் இந்த மகத்தான பயணம், இலங்கை ஊடகத்துறையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும்.
ஆழமான, நடுநிலையான மற்றும் மனிதநேயமிக்க ஊடகவியலை வளர்த்தெடுக்கும் தனித்துவமான பொறுப்பு ஒரு செய்தித்தாளுக்கு உள்ளது. உலகெங்கிலும் உள்ள ஊடகத்துறை ஒரு மாற்றத்தை சந்தித்து வரும் இக்காலத்தில், இந்த பொறுப்பு எப்போதையும் விட மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் ஊடகவியலின் எல்லையை விரிவுபடுத்தி, செய்திகளை சுவாரஸ்யமாக வெளிப்படுத்துவதற்கான புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளன. தகவல்களை வழங்குவது மட்டுமன்றி, குரல்களின் துடிப்பு, கொள்கை உறுதி மற்றும் பொதுநலன் சார்ந்த தளராத அர்ப்பணிப்பு ஆகியவற்றில்தான் ஊடகவியலின் உண்மையான பலம் அடங்கியுள்ளது. இந்த நிலையான குணங்களே ஊடகங்களை ஒரு ஜனநாயக சமூகத்தின் தூண்களில் ஒன்றாகத் தொடர்ந்து உறுதிப்படுத்துகின்றன.
வேகமாக வளர்ந்து வரும் ஊடக கலாச்சாரத்துக்கு மத்தியில், வீரகேசரி ஊடகவியலின் தருமங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் கட்டுப்பட்டு, மாறும் காலத்திற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஊடக தருமங்களை உயர்த்திப் பிடிக்கும் அதே வேளையில், பல தசாப்தங்களாகத் தொழில்நுட்ப மற்றும் சமூக மாற்றங்களை ஏற்றுக்கொண்டு பயணிப்பது சாதாரண சாதனையல்ல. வர்த்தகம், கலாச்சாரம், சுற்றுலா, சமயம் மற்றும் விளையாட்டு போன்ற துறைகளின் செய்திப் பதிவுகள் மூலம் இந்தியா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவதில் இச்செய்தித்தாள் முக்கிய பங்கு வகித்துள்ளது.
வீரகேசரி தனது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில், அதன் குறிப்பிடத்தக்க பயணத்திற்குப் பங்காற்றிய நிர்வாகம், ஊடகவியலாளர்கள், ஊழியர்கள் மற்றும் வாசகர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வீரகேசரி தனது பாரம்பரியத்தின் அடுத்த கட்டப் பயணத்தைத் தொடங்கும் வேளையில், தொடர் வெற்றிகளைப் பெற வாழ்த்துகிறேன் என்றுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM