இலங்கைத் தமிழ் ஊடகத்துறையின் முன்னோடியான 'வீரகேசரி' நாளிதழின் 96ஆவது ஆண்டு நிறைவையொட்டி, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வீரகேசரியின் பயணம், வெறும் ஊடக வரலாறு மாத்திரமல்லாது, இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார வாழ்வின் பதிவாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் குரலாகவும் விளங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கிலங்கை மக்களின் உணர்வுகளையும், சிறுபான்மை சமூகங்களின் நியாயமான கோரிக்கைகளையும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் வெளிப்படுத்துவதில் வீரகேசரி முக்கிய பங்காற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மை, நடுநிலைமை மற்றும் ஊடக தர்மத்தை நிலைநிறுத்தி பல தசாப்தங்களாக மக்களின் நம்பிக்கைக்குரிய செய்தி நிறுவனமாக வீரகேசரி திகழ்வது அதன் மிகப்பெரிய பலம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், டிஜிட்டல் யுகத்திலும் அச்சு ஊடகம், இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக காலத்திற்கேற்ப புதிய பரிமாணங்களுடன் தனது சேவையை தொடர்வது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சி மற்றும் தனது அரசியல் பயணத்தின் ஆரம்பகாலம் முதல் மக்கள் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் வீரகேசரி ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், அதன் நிர்வாகம், ஆசிரியர் குழு மற்றும் ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் அச்சமின்றி குரல் கொடுத்து வரும் பொறுப்புணர்வுமிக்க ஊடகமாக வீரகேசரி தொடர்ந்தும் விளங்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM