கன்றுதாச்சி எருமை சுட்டுக் கொலை: சந்தேகநபர்கள் விளக்கமறியலில் 

Published By: Digital Desk 3

06 Aug, 2026 | 12:11 PM
image

கடந்த 2 ஆம் திகதி தேசியப் பூங்காவில் கன்றுதாச்சி எருமை ஒன்றைச் சுட்டுக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள், வில்பத்து தேசியப் பூங்காவின் திவுல்வேவா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டனர். அதேவேளையில், மற்றைய இரண்டு சந்தேக நபர்கள் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.

சந்தேக நபர்களுடன் 76.5 கிலோகிராம் எருமை இறைச்சி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வனவிலங்கு அதிகாரிகள் நடத்திய விசாரணையின்படி, குற்ற நிகழ்விடத்தில் கொல்லப்பட்ட எருமையின் கருப்பையில் 4.5 கிலோகிராம் எடையுள்ள சிசு ஒன்று காணப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 16 வழக்குகள் இதுவரை நொச்சியாகம நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. தப்பியோடிய இரண்டு சந்தேக நபர்கள் பிணை பெறும் நோக்கில் வழக்கறிஞர்களின் உதவியுடன் நீதிமன்றத்தில் ஆஜரான போதிலும், நான்கு சந்தேக நபர்களும் இன்று (06) வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

வனவிலங்கு மற்றும் தாவரப் பாதுகாப்புச் சட்டம், பாதுகாக்கப்பட்ட பாலூட்டியான எருமையைக் கொல்வது, வைத்திருப்பது, வர்த்தகம் செய்வது, கொண்டு செல்வது மற்றும் காட்சிப்படுத்துவதைத் தடை செய்கிறது. வனவிலங்கு அதிகாரிகள், இதுபோன்ற இறைச்சிக் கடத்தலில் ஈடுபடும் வேட்டைக்காரர்களைக் கைது செய்வதற்காகத் தொடர்ந்து சோதனைகளை நடத்துகின்றனர். அருகிவரும் இந்த வன விலங்குகளைப் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையும் பொறுப்புமாகும். எனவே, இதுபோன்ற வேட்டைக்காரர்கள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து 1992 என்ற உதவி எண்ணை அழைக்கவும்.

இந்த சுற்றிவளைப்பை கலாஓயா பாதுகாப்பு அலுவலகத்தின் வனவிலங்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு.கே.எச்.டி. சந்தருவன், கட்டுபத்வெவ பீட்டு வலகத்தின் பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.டபிள்யூ. பண்டார, வனவிலங்கு காப்பாளர் ஆர்.எம்.சி.சி. ரத்நாயக்க மற்றும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளான ஜி.ஆர்.ஆர்.வி. குணதாச, எச்.எல்.ஜெயக்கொடி மற்றும் எச். ஹேரத் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால் மோசமான...

2026-08-19 02:21:50
news-image

மக்களின் நம்பிக்கைகளை காப்பாற்ற முடியாமல் அரசாங்கம்...

2026-08-19 02:19:58
news-image

வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான காணிகளை...

2026-08-18 12:58:18
news-image

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் கறுப்பு...

2026-08-18 15:28:30
news-image

அநுரவின் அரசியல் ஓய்வு கவலையளிக்கிறது -...

2026-08-18 16:08:39
news-image

ஒருவருக்காக நீதித்துறையில் மாற்றம் செய்வது பாரதூரமான...

2026-08-18 16:10:11
news-image

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நிர்வாக...

2026-08-18 16:21:31
news-image

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய 2027...

2026-08-18 17:19:44
news-image

சுற்றுலாத்துறையை மேம்படுத்த இலங்கையில் பயணிகள் ட்ரோன்...

2026-08-18 16:35:16
news-image

பாராளுமன்ற குண்டுத் தாக்குதலை நினைவுகூர்ந்து 22ஆம்...

2026-08-18 17:18:56
news-image

அமெரிக்காவின் வரி விதிப்புகளில் பெரும்பாலானவற்றை நீக்க...

2026-08-18 17:20:21
news-image

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல...

2026-08-18 17:37:41