குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு விசாரணை ஆகஸ்ட் 24ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

Published By: Vishnu

06 Aug, 2026 | 06:26 AM
image

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழங்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாணை புதன்கிழமை மாலை (05.08.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது.

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு புதன்கிழமை (5) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் மேலதிக விசாரணைகளுக்காகவும், வழக்கு மாநாட்டுக்காகவும் அழைக்கப்பட்டிருந்தது.  

கடந்த தவணையிலே சோகோ, பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம், அதேபோன்று காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பாக அவர்களது சட்டத்தரணி பிரசன்னமாகியிருந்தார். ஏனையவர்கள் மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.

அந்தவகையிலே  இந்த வழக்கு எதிர்வருகின்ற 2026.08.24 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காகவும், வழக்கு மாநாட்டுக்காகவும், தவணையிடப்பட்டுள்ளது.

தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை நிலவுகின்றது, அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது.  எனவே இந்த வழக்கு நடவடிக்கைகளை துரித கதியில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்குத் தேவையான நடிவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான கட்டளைகளை ஆக்குமாறு நாம் மன்றை வேண்டியிருந்தோம். அந்த வகையில் எதிர்வரும் 2026.08.24 ஆம் அந்த வழக்கு  மேலதிக நடவடிக்கைகளுக்காகவும், வழக்கு மாநாட்டுக்காகவும், தவணையிடப்பட்டுள்ளது. 

என குறித்த வழக்கின் பிரத்தியட்சக முறைப்பாட்டாளரான ரவூப் அப்துல் மஜீத் சார்பாக ஆஜரான நான் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37