இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் சந்திப்பு - இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு முயற்சிகள் குறித்து விரிவாக ஆராய்வு

Published By: Vishnu

06 Aug, 2026 | 06:13 AM
image

(நா.தனுஜா)

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதன்கிழமை (5) நாட்டுக்கு வருகைதந்த இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரிக்கும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் காலை கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இருதரப்பு ஒத்துழைப்பு முயற்சிகளின் முன்னேற்றம் மற்றும் எதிர்வருங்காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமைச்சர் விஜித்த ஹேரத், 'இந்தச் சந்திப்பு இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் என்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2026-08-15 06:17:08
news-image

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு...

2026-08-15 06:12:02
news-image

மக்கள் போராட்டத்துக்குப் பின்னர் உருவான அரசாங்கம்...

2026-08-15 06:01:04
news-image

வங்கி அதிகாரிகள், பொலிஸார் என நடித்து...

2026-08-15 05:57:44
news-image

வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 20ம் ஆண்டு...

2026-08-15 05:55:09
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா...

2026-08-15 05:47:55
news-image

சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதாகக் கூறிய பலரது...

2026-08-15 05:08:29
news-image

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தினால் அண்மைகாலமாக நாட்டில்...

2026-08-14 12:44:36
news-image

நீதித்துறையை அரசியலாக்க வேண்டாம் ; தைரியமிருந்தால்...

2026-08-14 16:54:24
news-image

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வெளிநாடுகள்...

2026-08-14 14:28:23
news-image

எனது தந்தை ரோஹண விஜேவீரவின் படுகொலைக்கு...

2026-08-14 16:24:59
news-image

22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக...

2026-08-14 16:41:37