நவம்பர் மாதம் மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், மியன்மாரின் சிரேஷ்ட பௌத்த சமயத் தலைவர்களையும், இராணுவ உயரதிகாரிகளையும் அந்நாட்டு மக்கள் தலைவர் ஆங் சான் சூ கீயையும் சந்தித்துப் பேசவுள்ளதாகத் தெரியவருகிறது.

மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்களுக்கெதிரான வன்செயல்கள் அதிகரித்துள்ள நிலையில், அங்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர் ஃபிரான்சிஸ், அந்தப் பிரச்சினை குறித்தே மேற்படி முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிகிறது.

நவம்பர் ஆறாம் திகதி முதல் டிசம்பர் இரண்டாம் திகதி வரையான இந்த விஜயத்தின்போது போப் ஃபிரான்சிஸ் பங்களாதேஷுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.

மியன்மாருக்கு விஜயம் செய்யவுள்ள முதலாவது பாப்பரசர் போப் ஃபிரான்சிஸ்தான்!